ஹோவார்ட் இசுட்டான்டன்
ஹோவார்ட் இசுட்டான்டன் (Howard Staunton, 1810 – 22 யூன் 1874) ஒரு ஆங்கில சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். 1843 தொடக்கம் 1851 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் உலகின் மிகப் பலம் வாய்ந்த விளையாட்டு வீரராக அவர் கருதப்பட்டார்.[1] குறிப்பாக 1843ல் செயின்ட்-அமன்ட் என்பவருக்கு எதிராக அவர் பெற்ற வெற்றியே இதற்கு முக்கிய காரணம். தெளிவாக வேறுபடுத்தி அறியக்கூடிய வகையிலான சதுரங்கத் தொகுதி ஒன்றை அவர் உருவாக்கினார். இசுட்டான்டன் சதுரங்கத் தொகுதி என்று அழைக்கப்படும் நத்தானியேல் குக் இதை வெளியிட்டுப் பிரபலமாக்கினார். தற்காலத்தில் இந்த சதுரங்கத் தொகுதியே போட்டிகளில் பயன்படுகின்றது. 1851ல் முதலாவது உலக சதுரங்கப் போட்டியின் முதன்மை அமைப்பாளராகவும் இவரே விளங்கினார் இப்போட்டியின் மூலமே இங்கிலாந்து உலகின் முன்னணி சதுரங்க மையமாக உருவானதுடன் அடோல்ஃப் ஆன்டர்சன் உலகின் மிகச் சிறந்த சதுரங்க வீரராகக் கருதப்பட வழிவகுத்தது.
ஹோவார்ட் இசுட்டான்டன் | |
---|---|
![]() | |
முழுப் பெயர் | ஹோவார்ட் இசுட்டான்டன் |
நாடு | இங்கிலாந்து |
பிறப்பு | ஏப்ரல் 1810 இலண்டன் |
இறப்பு | 22 சூன் 1874 Error: Need valid year, month, day) invalid day இலண்டன் | (அகவை
1840 ஆம் ஆண்டில் இருந்து இவர் முன்னணி சதுரங்க வர்ணனையாளராக இருந்ததுடன், 1840களின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றார். 1847க்குப் பின்னர் சேக்சுபியரிய வல்லுனராகவும் விளங்கினார். உடல்நலக் குறைவினாலும், இரண்டு எழுத்துத் தொழில் காரணமாகவும், 1851க்குப் பின்னர் சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார்.
மேற்கோள்கள்
- Murray, H.J.R. (November 1908). "Howard Staunton: part I". British Chess Magazine. Archived from the original on 8 டிசம்பர் 2007. http://web.archive.org/web/20071208141521/http://sbchess.sinfree.net/Staunton_BCM.html. பார்த்த நாள்: 19 June 2008.