ஹொஸ்ட் கோப்பு

கணினிகளில் ஹொஸ்ட் கோப்புக்கள் பெயருக்குரிய IP முகவரிகளாக மாற்ற உதவுகின்றது. கணினி முதலில் இதைப் பார்த்துவிட்டுப் பின்னரே டொமைனைப் பெயரிடும் சேவரூடாகப் பெயரை IP முகவரிகளாக மாற்ற முயலும். இது கணினியிலேயே சேமிக்கப்பட்டுள்ளதால் வேகமாகப் பெயருக்குரிய IP முகவரிகளாக மாற்ற முயலும் இதில் வெளியில் உள்ள சேவைகளைப் பொதுவாக மெதுவான சேவைகளைப் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

சரித்திரம்

ஆர்பா நெட் இருந்த இணையத்தின் ஆரம்ப காலத்தில் ஓர் முகவரிக்குரிய IP முகவரியாக மாற்றுவதற்கு கோப்புக்களே பயன்பட்டதெனினும் பின்னர் இணையம் வெகுவாக வளர்ச்சியடையத்தொடங்கியதால் இவ்வாறு கோப்புகளாக வைத்திருப்பதன் சாத்தியங்கள் குறையத் தொடங்கின.

90 களில் விண்டோஸ் கணினிகளில் பாதுகாப்புக் குறைவான கணினிகளில் பிரயோசனம் இல்லாத இணையத்தளங்களை அணுக விடாமல் பாதுகாப்பதற்கும் இன்றளவில் பயனபடுகின்றது.

ஹொஸ்ட் கோப்பு இருக்குமிடம்

இதன் முழுமையான கோப்பு இடம் ரெஜிட்ரியிலேயே தீர்மானிக்கப்படும் \HKLM\SYSTEM\CurrentControlSet\Services\Tcpip\Parameters\DataBasePath .

விண்டோஸ் நிறுவும்பொழுதே ஹொஸ்ட் கோப்பினை விரும்பியபடி மாற்றவிரும்பினால் நிறுவல் இறுவட்டில் (சீடி) $OEM$\$$\system32\drivers32\etc என்று ஒரு கோப்புறையை (போல்டர்) உருவாக்கிஇல் அதில் ஹொஸ்ட் கோப்பினைச் சேமித்தல் வேண்டும்.

ஹொஸ்ட் கோப்பு முறை

இது மிகவும் இலகுவான ஓர் முறையாகும் இதில் ஹொஸ்ட் பெயருக்குரிய IP முகவரிகளை வழங்குவதே இதன் பணியாகும்.

192.168.0.6   www.example.com example.com
#இது ஒரே வரியில் www.example.com ஐயும் example.com 192.168.0.6 என்ற முகவரிக்கு வழங்கும்

இதுவும் வேலை செய்யும்...

192.168.0.6   www.example.com
192.168.0.6   example.com
#மேலுள்ள இரண்டு வரிகள் www.example.com மற்றும் example.com 192.168.0.6 முகவரிக்கு மாற்றியமைக்கும்

குறிப்பு: #இது அபிப்பிராயம் (காமண்ட் - Comment) ஆகும்

விளம்பரங்களை இல்லாதொழித்தல்

IP முகவரிகள் 127.0.0.1 அல்லது 127.x.x.x. எல்லாமே அதே கணினிக்குரிய முகவரிகளே இது localhost (லோக்கல்ஹொஸ்ட்) என்றவாறும் அழைக்கபடும். எனவே தேவையில்லாத இணையத்தளத்தில் முகவரியை 127.0.0.1 என்றவாறு ஹொஸ்ட் கோப்பில் மாற்றிவிட்டால் தேவையில்லாத பக்கங்கள் கணினியில் தோன்றாது

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.