ஹைலாகண்டி மாவட்டம்
ஹைலாகண்டி மாவட்டம் அசாமில் உள்ளது. கசார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. [1] இந்த மாவட்டம் 1327 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [2] இந்த மாவட்டத்தின் பாதிப் பகுதி காடுகளால் சூழப்பட்டது.
ஹைலாகண்டி மாவட்டம் হাইলাকান্দি | |
---|---|
மாவட்டம் | |
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | |
மாநிலம் | அசாம் |
மாவட்டத்தை உருவாக்கிய நாள் | 01-10-1989 |
தலைமையகம் | ஹைலாகண்டி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,327 |
ஏற்றம் | 21 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,59,260 |
• அடர்த்தி | 497 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காளம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 788XXX |
தொலைபேசிக் குறியீடு | 91 - (0) 03844 |
வாகனப் பதிவு | AS-24 |
இணையதளம் | hailakandi.nic.in |
பொருளாதாரம்
இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சிக்கான நிதியைப் பெறுகிறது. [3]
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 659,260 மக்கள் வசித்தனர். [4]
சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 497 பேர் வாழ்கின்றனர். [4] பால் விகிதாச்சார அளவு, ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 946 பெண்கள் என்ற அளவில் உள்ளது. [4] இங்கு வாழ்வோரில் 75.26% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [4] இங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இங்கு பூர்வீக பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்பூரி மொழியைப் பேசுகின்றனர்.
சான்றுகள்
- Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
- Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7.
- Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.