ஹாரிதி

ஹாரிதி(हारीती) பௌத்தத்தில் குழந்தையின் பாதுகாப்புக்கும், நற்பிரசவத்திக்கும், குழந்தைகளின் நல்வளர்ப்புக்கும், தாம்பத்திய புரிந்துணர்வுக்கும், காதல் மற்றும் குடும்பத்தின் பாதுகாப்புக்கு அதிபதியாக கருதப்படுபவர் ஆவார். இவரை ஜப்பானிய மொழியில் கிஷிமொஜின் என அழைப்பர். குழந்தைப்பேறற்ற பெண்களும் குழந்தை பெறுவதற்காக ஹாரிதியிடம் முறையிடுவர்.

குழந்தையை பேணுபவராக ஹாரிதி
ஹாரிதி தன் துணை பஞ்சகருடன்
ஹாரிதி - ஜப்பானிய ஓவியம்

தோற்றம்

ஆரம்பத்தில், ஹாரிதி நர மாமிசம் தின்னும் அரக்கியாக இருந்தார். இவருக்கு நூற்றுக்கணக்கான பிள்ளைகள் இருந்தனர். அனைவரையும் இவர் போற்றி பாதுகாத்து வந்தார். எனினும் அக்குழந்தைகளின் உணவுக்காக பல்வேறு குழந்தைகளை களவாடி கொன்ற வண்ணம் இருந்தார். இதனால பாதிக்கப்பட்ட இறந்த குழந்தகைளின் தாய்மார்கள் புத்தரிடம் முறையிட்டனர்.

புத்தர் ஹாரிதியின் இளைய மகனான ஐஜியை தன்னுடைய பிச்சை பாத்திரத்தினுள் ஒளித்துக்கொண்டார். ஹாரிதி தனது குழந்தையை பிரபஞ்சத்தின் அனைத்து இடங்க்ளிலும் தேடியும் அவளுக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில் இறுதியாக அவள் புத்தரின் உதவியை நாடினாள். நூற்றுக்கணக்கான குழந்தைகளுள் ஒரு குழந்தையை தொலைத்ததற்கே வருத்தப்படுபவள், அவள் கொன்ற பல நூறு குழந்தைகளின் தாய்மார்களின் நிலைமையை கற்பனை செய்யும் படி ஹாரிதியிடம் புத்தர் கூறினார். தன்னுடைய தவறை உணர்ந்த அவள் அனைத்து குழந்தைகளின் பாதுகாவலராக இனி இருப்பதாக புத்தரிடம் உறுதி அளித்தாள்.

சில கதைகளின் இவள் அவலோகிதரின் பெண் உருவான குவான் யின் உடைய அம்சமாகவும் கருதப்படுகிறார்.

பஞ்சிகர் இவருடைய துணை ஆவார். பஞ்சிகர் குபேரனின் 28 ய‌க்‌ஷ தளபதிகளுள் ஒருவர்.

வேறு பெயர்கள்

  • காங்கிமொ
  • காரிடே
  • காரிடேமொ
  • கிஷிபொஜின்
  • கோயாசு கிஷிபொஜின்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.