ஹமித் கர்சாய்

ஹமித் கர்சாய் (பாஷ்தூ மொழி: حامد کرزي) ஆப்கானிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2001இல் டாலிபான் அரசு அகற்றப்பட்டதுக்கு பிறகு இவர் ஆப்கானிஸ்தான் மாற்றல் ஆட்சியின் தலைவராக இருந்தார். 2004இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றுள்ளார்.

அமித் கர்சாய்
حامد کرزي
2006-இல் கர்சாய்
ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
டிசம்பர் 22 2001
டிசம்பர் 7 2004 வரை நடப்பின் படி
துணை குடியரசுத் தலைவர் அகமது சியா மசூத்
கரீம் கலீலி
முன்னவர் புர்ஹானுத்தீன் ரப்பானி
தனிநபர் தகவல்
பிறப்பு 24 திசம்பர் 1957 (1957-12-24)
கந்தஹார், ஆப்கானிஸ்தான்
அரசியல் கட்சி சுதந்திரம்
வாழ்க்கை துணைவர்(கள்) சீனத் கர்சாய் கான்
சமயம் இஸ்லாம்

கந்தஹார் நகரில் பிறந்த கர்சாய் இமாசலப் பிரதேசத்தில் அரசியல் அறிவியல் படித்தார். ஆப்கான் சோவியத் போரில் முஜாஹிதீன் வீரர்களுக்கு நிதியுதவி செய்தார். இந்த காலத்தில் அமெரிக்காவின் சிஐஏ இவருக்கு முஜாஹிதீனுக்கும் உதவி செய்துள்ளது.

டாலிபான் ஆட்சி தொடங்கப்பட்ட பொழுது கர்சாய் முதலாக அவர்கள் இடம் இருந்தார், ஆனால் டாலிபான் பக்கம் இருந்து பிரிந்து போனார்.

இன்று வரை தீவிரவாதிகளும் டாலிபான் வீரர்களும் இவரை நாலு தடவை கொலை செய்யப் பார்த்துள்ளனர்.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.