ஹரீஷ் பேரடி

ஹரீஷ் பேரடி, மலையாளத் திரைப்பட, நாடக நடிகராவார்.[1] மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்களை எண்ணினால் முப்பத்தைந்தை தாண்டும்.[2] லெப்ட் ரைட் லெப்ட் என்ற மலையாள திரைப்படத்தில் இவர் நடித்த கைதேரி சகாதேவன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இவர் புகழ்பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

கோழிக்கோட்டு சாலப்புறம் கோவிந்தன் நாயர், சாவித்ரி ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார்.

1993 திசம்பர் மூன்றாம் நாளில், நாடக நடிகையாய் இருந்த பிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திரைத்துறை வாழ்க்கை

கோழிக்கோட்டு அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த போது பள்ளி நாடகமொன்றில் நடித்தார்.[3] அப்பு, உண்ணி என்ற இரு கதாப்பாத்திரங்களை மட்டுமே கொண்டு ஜெயப்பிரகாஷ் குளூர் இயக்கிய அப்புண்ணிகள் என்ற நாடகத்தில் உண்ணி என்ற வேடத்தில் நடித்தார். இந்நாடகம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் 3,500 முறைக்கு மேல் அரங்கேற்றப்பட்டது.[2]

பத்தொன்பதாம் வயதில் அனைத்திந்திய வானொலியில் நாடக நடிகரானார்.[4]

இவர் சிபி மலையில் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி, பின்னர் ரெட் சில்லீஸ், லெப்ட் ரைட் லெப்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.[4]

தொலைக்காட்சித் தொடர்கள்

இவர் கீழ்க்காணும் மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

  • ஸ்ரீகுருவாயூரப்பன்
  • பாமினி தோல்காரில்ல
  • குஞ்ஞாலி மரக்கார்
  • அலாவுதீன்றெ அல்புத விளக்கு
  • காயங்குளம் கொச்சுண்ணியுடெ மகன்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி
2000 நரசிம்மம் மலையாளம்
2008 டே இங்ஙோட்டு நோக்கியே
2009 ஆயிரத்தில் ஒருவன் கணேசன்
2009 ரெட் சில்லீஸ் பிரான்கோ
2013 லெப்ட் ரைட் லெப்ட் கைதேரி சகாதேவன்
நாடன் பரதன்
விசுத்தன் வாவச்சன்
2014 கேங்ஸ்டர் மைக்கேல்
2014 ஞான் நகுலன்
2014 வர்ஷம்
2015 லைப் ஆப் ஜோசுட்டி யோசப்
2014 பாலிடெக்னிக்
2015 லோஹம்
2016 மூன்னாம் நாள் ஞாயிறாழ்ச
ரோசாப்பூக்கால
கிடாரி தமிழ்
ஆண்டவன் கட்டளை அலுவலர்
புலிமுருகன் மேஸ்திரி மலையாளம்
ப்ரேதம் பாதிரியார்
2017 பர்ச்சாயி
சீப்ரா வரிகள்
காப்புச்சீனோ
ப்ரேதமுண்டு சூட்சிக்குக
அபி ரவி
கோதா ரவி
விக்ரம் வேதா சேட்டன் தமிழ்
ஸ்பைடர் சிபிஐ அலுவலர் தமிழ், தெலுங்கு
அய்யாள் ஜீவிச்சிரிப்புண்டு மலையாளம்
மெர்சல் மருத்துவர் அர்ஜுன் சக்காரியா தமிழ்
2018 ஸ்கெட்ச் சேட்டு
2.0 தமிழ், இந்தி
2018 பாயல் குஞ்ஞுண்ணி[5] மலையாளம்
2018 மூன்னர
2018 ஐங்கரன் தமிழ்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.