ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம்

ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம் (ஆங்கிலம்:Hamm Kamatchi Ambal Temple) என்பது ஜெர்மனி நாட்டிலுள்ள ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலாகும். ஐரோப்பிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய இந்துக் கோயிலான இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.[1] இது காமாட்சி அம்மனுக்கு இந்தியா மற்றும் தென் ஆசியா பகுதிகளுக்கு வெளியே அமைந்துள்ள ஒரே கோயிலாகும். வடக்கு ரைன்-வெஸ்ட்பலியா மாகாணத்தில் 3000 இந்துகள் உட்பட மொத்தம் 45,000 இந்துக்கள் ஜெர்மனியில் வசிக்கிறார்கள்.

ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம்
ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம்
ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம்
ஜெர்மனியில்
ஆள்கூறுகள்:51°41′13.83″N 7°57′2.93″E
பெயர்
பெயர்:ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்
அமைவிடம்
நாடு:ஜெர்மனி
மாவட்டம்:ஹம்
கோயில் தகவல்கள்
மூலவர்:காமாட்சி
சிறப்பு திருவிழாக்கள்:தேர்த்திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:2002
இணையதளம்:https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் வடிவில் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் கிழக்கு பார்த்த கோயிலாக அமைந்துள்ளது.[2] இக்கோயிலில் சிவன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், லட்சுமி நாராயணர், நவக்கிரகம், ஐயப்பன் மற்றும் பைரவர் சந்நிதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.[3]

படக் காட்சியகம்

கோயில் ஒளிப்படங்கள்
2007 ஆம் ஆண்டு திருவிழா
2007 ஆம் ஆண்டு திருவிழா  
2014 ஆம் ஆண்டு திருவிழா
2014 ஆம் ஆண்டு திருவிழா  
காவடி ஆட்டம்
காவடி ஆட்டம்  
கோயில் தேர்
கோயில் தேர்  
கோயில் கோபுர அமைப்பு
கோயில் கோபுர அமைப்பு  

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Hindu temple in the Ruhr". dw.com. https://www.dw.com/de/hindu-tempel-im-ruhrpott/a-587631. பார்த்த நாள்: 8 July 2019.
  2. "ஜெகத்தை ஆளும் ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்". மாலைமலர். https://www.maalaimalar.com/devotional/temples/2017/09/20154148/1108992/Germany-Kamatchi-Amman-Temple.vpf. பார்த்த நாள்: 8 July 2019.
  3. "ஜெர்மனியில் காமாட்சி அம்மன் கோயிலில் தேர்த் திருவிழா". தினகரன். http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1349. பார்த்த நாள்: 8 July 2019.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.