ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் 1921 ஆம் வருடத்திலிருந்து தமிழில் வெளியாகும் மாத இதழ். இந்த ஆன்மீக பண்பாட்டு இதழை சென்னையில் உள்ள இராமகிருஷ்ண மடத்தினர் வெளியிடுகின்றனர். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுவாமி சர்வானந்தர் இருந்த சமயம் 1921 தை முதல் தேதி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் துவங்கப்பட்டது. 1921-1922 இல் ’அண்ணா’ என்.சுப்ரமண்யம் இதன் ஆசிரியராக இருந்தார். அதன் பின்னர் 1922-1925 இல் சுவாமி விபுலாநந்தர் இதன் ஆசிரியராக இருந்தார்.

1921-1970 வருட கால கட்டத்தில் விளம்பரங்கள், படங்கள் இன்றி வந்தது. 2007 ஆம் ஆண்டு 55000 பள்ளி மாணவர்கள் இப்பத்திரிக்கையின் சந்தாதாரர்களாக இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஆகஸ்ட் 2007;
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.