ஸ்பாட்டகஸ்

ஸ்பாட்டகஸ் (கிரேக்க மொழி: Σπάρτακος, Spártakos; இலத்தீன்: Spartacus[1]) (கி.மு. 109–71) என்பவர் உரோமைக் குடியரசுக்கு எதிரான ஓர் பாரிய அடிமைகளின் எழுச்சியின் மூன்றாம் சேர்விலே போரில் உரோமினால் அடிமைகளாக்கப்பட்டவர்களின் தலைவராக இருந்தவர். போருக்கு வெளியே ஸ்பாட்டகஸ் பற்றி குறைவாகவே அறியப்படுகின்றது. வரலாற்றுப் பதிவுகளும்கூட குழப்பமானவையும் நம்பகத்தன்மையற்றதாகவுமே காணபப்டுகின்றன. ஆனாலும் எல்லா மூலங்களும் அவர் ஓர் முன்னாள் கிளாடியேட்டராகவும் முழுமையான படைத் தலைவராகவும் இருந்தார் என்பதில் உடன்படுகின்றன.

ஸ்பாட்டகஸ்
ஸ்பாட்டகஸ் சிற்பம், 1830
பிறப்புகி.மு. 109
கிரேக்கத்தின் ஸ்ருமா நதி உள்ள பகுதி
காணாமல்போனதுகி.மு. 71
பெடேலியாவுக்கு அண்மித்த போர்க்களம்

ஸ்பாட்டகஸின் போராட்டம் என்பது அது அடிமை ஆட்சிக்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எடுத்துக்காட்டாக சிலரால் விளக்கமளிக்கப்பட்டு, பல அரசியல் சிந்தனையாளர்களின் அகத்தூண்டலாக இருந்து வருகின்றது. இது பல இலக்கியங்கள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குறிப்புக்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.