ஷகிலா (பாலிவுட் நடிகை)

ஷகிலா (Shakila , சனவரி 1, 1935 – 20 செப்டம்பர் 2017) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

சகிலா 1935 சனவரி 1 இல் பிறந்தார். இவரது உடன் பிறந்தவர்கள் நூர்ஜஹான் என்ற நூர். இவரை இந்தி பட உலகின் சிரிப்பு நடிகரான ஜானி வாக்கர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய மற்றொரு தங்கை நசிரீன்.[1] இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர்கள் வறுமை நிலையில் அத்தையின் பாதுகாப்பில் பம்பாயில் வசித்து வந்தனர்.

இவர் நடித்து வெளிவந்த முதல் படம் துன்யா (1949 ). தஸ்தான் (1950 ) திரைப்படத்தில் ராஜ் கபூர், சுரையா ஆகியோருடன் ஷகிலா சிறு வயது வீணாவாக நடிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1954 இல் வெளிவந்த குருதத்தின் திரைப்படமான ஆர் பார் (1954 ) படத்தில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். 1954 இல் இவர் நடித்த ஒன்பது படங்கள் வெளிவந்தன. இவர் நடிப்பில் வெளிவந்த ஆர் பார் (1954), சி. ஐ. டி (1956), சைனா டவுன் (1962) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 50 இற்கும் அதிகமான படங்களில் நடித்து 1963 இல் ஓய்வு பெற்றார்.[2]

1962 இல் ஜானி பார்பர் என்பவரைத் திருமணம் புரிந்து, இங்கிலாந்து சென்றார்.[3] எனினும் அவருடைய மணவாழ்க்கை சிறக்கவில்லை. இவர்களுக்கு மீனாஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது. 1991 இல் மகள் இறந்தார்.

மறைவு

சகிலா சில ஆண்டுகளாக எந்தப் பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாதிருந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் இவரை மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ளவில்லை. பின்பு ஜூஹூ பகுதியில் உள்ள ஆரோக்கிய நிதி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் 2017 செப்டம்பர் 20 இல் காலமானார்.[4][5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.