வேலு பிரபாகரன்
வேலு பிரபாகரன் (Velu Prabakaran) என்பவர் ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் என்ற பல பரிமானங்களைக் கொண்டவராவார். சர்ச்சைக்குரிய கருப்பொருள்களுக்காக இவர் அறியப்படுகிறார், பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர செய்திகளை இவரது படங்களில் எடுத்துக்காட்டுகிறார்[1].
வேலு பிரபாகரன் Velu Prabakaran | |
---|---|
பிறப்பு | வேலு பிரபாகரன் 6 மே 1957 |
இருப்பிடம் | சென்னை, இந்தியா |
பணி | இயக்குனர் நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1984– இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | செர்லி தாசு |
வாழ்க்கை
1989 ஆம் ஆண்டு திகில் படமான நாளைய மனிதன் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, அதன் தொடர்ச்சியாக 1990 ஆம் ஆண்டு அதிசய மனிதன் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு வேலு பிரபாகரன் ஓர் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஆர். கே. செல்வமணியின் தயாரிப்பில் அசுரன் மற்றும் ராஜாளி ஆகிய இரண்டு அதிரடி படங்களை இயக்கினார். இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தன[2]. பின்னர் அதிரடி படங்களில் இவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். பெரும்பாலும் புரட்சியாளராக நடித்தார். கடவுள் (1997), சிவன் (1999) மற்றும் புரட்சிக்காரன் (2000) ஆகிய திரைப்படங்களை உருவாக்கினார். 2000 ஆம் ஆண்டில் தீபாவளி என்ற திரைப்படத்திற்கான முன் தயாரிப்பைத் தொடங்கிய இவர், நடிகர் கமலகாசனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினார். இருப்பினும், நடிகரின் நிராகரிப்பால் அந்த திட்டம் பின்னர் தயாரிக்கலாம் என்ற நோக்கில் நிறுத்தப்பட்டது[3]. 2004 ஆம் ஆண்டில் வேலு பிரபாகரன் காதல் அரங்கம் என்ற திரைப்படத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார். இந்தத் திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை இவர் எழுதினார்[4]. புதுமுகங்கள் பிரீத்தி ரங்காயணி மற்றும் செர்லி தாசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் சமூகத்தில் காமத்தின் மீதான தவறான எண்ணங்களை அம்பலப்படுத்தும் என்பதை முன்னிறுத்தினார். ஆனால் பின்னர் அவர் படத்தின் இயக்குனர் என்ற தகுதியை தனது சகோதரர் வேலு ராசாவுக்கு வழங்கினார். மேலும், இப்படம் நடைமுறையில் உள்ள சாதி முறையையும் எடுத்துக்காட்டி பாலுணர்வு தொடர்பான கருத்துகளையும் ஆராய்கிறது. எனவே தணிக்கை செய்யும் காட்சிகள் காரணமாக திரைப்படத்திற்கு ஒரு சான்றிதழை வழங்க தணிக்கையாளர்கள் தயாராக இல்லை. இதனால் டிசம்பர் 2004 இல் தணிக்கை வாரியத்துடன் போர் நடக்கத் தொடங்கியது[5].
இந்த படம் சமூக அக்கறை தொடர்பான பிரச்சினைகளைத் தொட்டது என்றும் இளைஞர்களிடையே பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது என்றும் டிசம்பர் 2006 இல் வேலு பிரபாகரன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஓர் உணர்ச்சிபூர்வமான வேண்டுகோளை விடுத்தார்[6]. படக்குழு இறுதியாக 2009 ஆம் ஆண்டில் சில காட்சிகளைக் குறைக்கவும், சில உரையாடல்களை முடக்கவும் ஒப்புக்கொண்டு தணிக்கைகளுடன் திரைப்படத்தை வெளிட சமரசம் செய்து கொண்டது. காதல் அரங்கம் என்று வைக்கப்பட்டிருந்த படத்தின் தலைப்பு காதல் கதை என்று மாற்றப்பட்டது[7]. திரைப்படம் வெளியிடுவது தொடர்பான கருத்துகளையும் சிரமங்களையும் இத்திரைப்படத்தின் நீட்டிப்பு காட்சிகளாக வேலு பிரபாகரன் இப்படத்தில் சேர்த்தார். துணிச்சலான இயக்குனர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அவர் நடித்துள்ள கதைப் பாத்திரம் தன்னுடைய சுயசரிதை என்று குறிப்பிடுகிறார்[8], இந்தப் படம் விமர்சகர்களிடமிருந்து மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படத்திற்கென்று தனியாக திரைக்கதை ஏதும் இல்லை என்று ஒரு விமர்சகர் விமர்சித்தார். பாலியல் காட்சிகளுடன் ஒன்றிணைந்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்"[9]. இத்திரைப்படம் பாலியல் திரைப்படம் என்ற ஒரு தகுதியைப் பெற்றாலும்கூட பார்ப்பதற்கு மிகவும் சலிப்பைத் தருகிறது. படத்தை பார்க்கவே முடியவில்லை என்று மற்றொரு விமர்சகர் குறிப்பிட்டார்[10].
2009 ஆம் ஆண்டில் சே.எசு.கே திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்காக தேவதாசி என்ற திரைப்படத்தை இயக்க சம்மதித்து கையெழுத்திட்டார். இப்படம் 16 16 ஆம் நூற்றாண்டின் காதல் கதையைச் சொல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இவர் முகமூடிக் கூத்து என்ற பெயரில் மற்றொரு திரைப்பட திட்டத்தையும் பின்னர் முக்கிய வேடமேற்று நடிக்கும் கலைஞனின் காதல் என்ற மற்றொரு திரைப்படத் திட்டத்தையும் தொடங்கினார்[11]. படத்திட்டங்கள் தொடங்குவதில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்ததால் 2017 ஆம் ஆண்டு ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற திரைப்படத்தின் முன்னோடிக் காட்சி விளம்பரம் வெளியிடப்படும்வரை இவர் பல ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார்.
சொந்த வாழ்க்கை
அறுபது வயதில் தன்னுடைய திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்த செர்லி தாசை திருமணம் செய்து கொள்ளப்போவதாக 2017 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் நாள் வேலுப்பிரபாகரன் அறிவித்தார்[12][13].
திரைப்பட வரலாறு
ஆண்டு | தலைப்பு | பங்கேற்பு | குறிப்புகள் | ||||
---|---|---|---|---|---|---|---|
இயக்குனர் | கதாசிரியர் | ஒளிப்பதிவாளர் | நடிகர் | கதைப் பாத்திரம் | |||
1989 | நாளை மனிதன் | ![]() | ![]() | ![]() | |||
1989 | 'சரியான ஜோடி | ![]() | ![]() | ![]() | |||
1989 | பிக்பாக்கெட் | ![]() | |||||
1990 | அதிசய மனிதன் | ![]() | |||||
1991 | உருவம் | ![]() | |||||
1993 | உத்தம ராசா | ![]() | |||||
1995 | புதிய ஆட்சி | ![]() | ![]() | ![]() | ![]() | தமிழ்மணி | |
1995 | அசுரன் | ![]() | ![]() | ||||
1996 | ராசாளி | ![]() | ![]() | ||||
1997 | கடவுள் (திரைப்படம்) | ![]() | ![]() | ![]() | ராஜபாண்டி | தமிழக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது | |
1999 | சிவன் | ![]() | ![]() | ![]() | |||
2000 | புரட்சிக்காரன் | ![]() | ![]() | ![]() | தமிழ்மணி | ||
2007 | நாளைய பொழுதும் உன்னோடு | ![]() | |||||
2009 | காதல் கதை | ![]() | ![]() | ![]() | இவரே | ||
2011 | பதினாறு (திரைப்படம்) | ![]() | |||||
2017 | ஒரு இயக்குனரின் காதல் டைரி | ![]() | ![]() | ![]() | |||
2019 | காங்சு ஆப் மெட்ராஸ் | ![]() | |||||
2019 | கடவுள் 2 | ![]() | ![]() | ![]() | |||
மேற்கோள்கள்
- Kumar, S.R.Ashok. "Film runs into trouble with Censor Board". பார்த்த நாள் 4 January 2014.
- "reference". Indolink.com. மூல முகவரியிலிருந்து 27 September 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 January 2014.
- https://web.archive.org/web/20030214172201/http://cinematoday2.itgo.com/33Hot%20News%20Just%20for%20U3.htm
- "Making a mark". பார்த்த நாள் 4 January 2014.
- "Velu Prabhakaran's clash with censors". IndiaGlitz. பார்த்த நாள் 4 January 2014.
- "Censors' 'No' to 'Kadal Arangam". Nowrunning.com. பார்த்த நாள் 4 January 2014.
- "Velu Prabakaran's bold film gets censor nod!". Sify. பார்த்த நாள் 4 January 2014.
- "Grill Mill". பார்த்த நாள் 4 January 2014.
- "KADHAL KADHAI MOVIE REVIEW". Behindwoods. பார்த்த நாள் 4 January 2014.
- "Kadhal Kadhai — Perverse, uninteresting and badly made". IndiaGlitz. பார்த்த நாள் 4 January 2014.
- "Velu Prabakaran's 'Mugamoodi Koothu'". IndiaGlitz. பார்த்த நாள் 4 January 2014.
- "60-year-old director Velu Prabhakaran marries actress Shirley Das" (4 June 2017).
- "Tamil director Velu Prabhakaran marries his Kadhal Kadhai heroine Shirley Das".