வேதநாயகம் சாஸ்திரியார்

வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864), தஞ்சைக் கவிஞரும் இரண்டாம் சர்போஜியின் பிரதான புலவரும் ஆவார். இவர் பெயரில் 133 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட பாடல்களும் உள்ளன.

வாழ்க்கை

இவர் 1774 செப்டம்பர் 7 இல் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.இவர் போதகனார் தேவசகாயம் (முன்னாள் அருணாச்சலம்) ஞானப்பூ ஆகியோரின் முதலாம் மகனாவார். இவரின் அக்கா தங்கைகளான சூசையம்மாளும் பாக்கியம்மாளும் தங்கள் தாயைச் சிறுவயதிலேயே இழந்தனர். இவர் பத்தாம் அகவையில் கிறித்துவின் சிலுவைத் தோற்றத்தைக் கண்டதாக கூறப்படுகிறது.

புதிய ஏற்பாட்டின் பாதகத்தை அறிந்து, கிறித்தியான் ஃபிரீட்ரிக் சவார்சு என்ற ஒரு செருமனி நாட்டு ஊழியக்காரரை தேடி, தனது 12 ஆம் அகவையில் சீர்திருத்திய திருசபைக்கு மாறினார். சவாசின் கீழ் கல்வி பயின்றார். சவாசுக்கு, இளவரசர் சர்போஜி (பின்னாள் தஞ்சாவூரின் இரண்டாம் சர்போஜி) என்னும் மற்றொரு சீடர் இருந்தார். இவரது கல்வி, அந்நாளைய குரு-சீட மரபில் நிகழ்ந்தது.

பின்னர், தரங்கம்பாடியில் தனது வேதவியல் பட்டத்தைப் பெற்றார். இவரது பேராசிரியர்களாக கலாநிதி ஜான், கலாநிதி காமரர், புனித ரோட்டிலர் ஆகியோர் வாய்த்தனர்.

இவர் 19ஆம் அகவையில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஊர்களில் அற்செய்திப் பள்ளியாசிரியராக அமர்ந்து இலக்கியம், கணிதம் ஒழுக்கவியலைக் கற்பித்தார். பின்னர் தலமையாசிரியராக பணியேற்றார்.

அதற்பின், தனது பள்ளி நண்பரான இளவரசர் சர்போஜி மன்னராக முடிசூடியப்பின், இவர் அரசவையின் முதன்மைப் புலவரானார். முதலில் அரண்மனையில் யாவும் சமாதானமாக இருந்தது, அரசரே இவரை முதிய உடன்பிரப்பாகத் தான் அழைத்துள்ளார். எனினும் பின்னர், கிறித்தவத்தை வெறுத்த சில ஆற்றல்மிகு பிரபுக்கள் இருப்பினும் சாஸ்திரியார் அச்சமின்றித் தனது கிறித்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்; மற்ற மதங்களை மதித்து தன் மதத்தை கைவிடாமலிருந்தார். கடைசி வரை இவர் பாடிய பஜனைகள் யாவும் இயேசு கிறித்துவைப் போற்றியே அமைந்தன.

இவரின் நம்பிக்கை மற்றவர்பால் மிக ஆற்றலோடு திகழ்ந்தது. அந்நாளில் கடுஞ்சிறுவனான தரங்கம்பாடி சாமுவேலன் எனும் சரஸ்வதி மகால் நூலகத்தில் பணிபுரிந்த சாமுவேலன் அய்யனைக் கடும் விவாதத்தின் பின்னர் கிறித்தவத்திற்கு மதமாற்றினார்.

அளிக்கப்பட்ட பட்டங்கள்

    • வேத சிரோன்மனி
    • ஞான கவிச்சக்கிரவர்த்தி
    • ஞானதீபக் கவிராயர்
    • வேத சாஸ்திரிகள்
    • சுவிசேஷ கவிராயர்

இயற்றிய நூல்கள்

    • பெத்தலேகம் குறவஞ்சி
    • ஞானத்தச்சன்
    • சென்னப் பட்டணப் பிரவேசம்
    • ஞானக் கும்மி
    • ஆதியானந்தம்
    • பராபரன் மாலை
    • வண்ண சமுத்திரம்
    • அறிவானந்தம்
    • பேரின்பக் காதல்
    • அரணாதிந்தம்
    • தியானப் புலம்பல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.