வே. அகிலேசபிள்ளை

வே. அகிலேசபிள்ளை (மார்ச்சு 7, 1853 - சனவரி 1, 1910, தமிழறிஞரும், ஈழத்துப் புலவர்களில் ஒருவர். பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.

வேலுப்பிள்ளை அகிலேசபிள்ளை
பிறப்புமார்ச்சு 7, 1853(1853-03-07)
திருகோணமலை, இலங்கை
இறப்புசனவரி 1, 1910(1910-01-01) (அகவை 56)
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுபதிப்பாளர், உரையாசிரியர், புலவர்
பெற்றோர்வேலுப்பிள்ளை
பிள்ளைகள்இராசக்கோன்,
அழகக்கோன்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். இராசக்கோன், அழகக்கோன் என்பார் இவரது புதல்வர்கள்.

இயற்றிய நூல்கள்

  • திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல்
  • திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல்
  • திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல்
  • நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல்
  • திருக்கோணைநாயகர் பதிகம்
  • திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம்
  • திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் (1923)
  • வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல் (1887)
  • வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை முதலியன.
  • திருக்கோணாசல வைபவம் (1950)

பதிப்பித்த நூல்கள்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.