வெண்பலகை
ஒரு வெள்ளைப்பலகை (மார்க்கர் போர்டு, உலர்-அழிக்கும் பலகை, போர்டு, உலர்-துடைப்பு பலகை, பேனா-போர்டு என்றும் அறியப்படுகிறது). வெள்ளைப் பலகைகள் கருப்புப்பலகையுடன் ஒத்ததாக இருக்கின்றது, ஆனால் இதன் மென்மையான மேற்பரப்பு வேகமாக எழுதவும், எழுதியவற்றை எளிதில் அழிக்கவும் உதவுகிறது. 1990 களின் நடுப்பகுதியில் வெண்பலகைகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. தற்காலத்தில் இவை பல அலுவலகங்கள், சந்திப்பு அறைகள், பள்ளி வகுப்பறைகள் மற்றும் பிற வேலை சூழல்களில் ஒரு அங்கமாகிவிட்டன.

வெண்பலகை என்பது உருவகப்படுத்தக்கூடிய கணினி மென்பொருள்ம் அம்சங்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய "மெய்நிகர் வெப்கோர்ட்ஸ்" ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் படங்களை எழுத அல்லது வரைய அனுமதிக்கின்றன. வெண்பலகையானது மெய்நிகர் சந்திப்பு, மற்றும் உடனடி செய்தி பகிர்வு ஆகியவற்றில் பயன்படுகிறது. வெண்பலகையானது ஊடாடும் வெண்பலகை என்றும் அறியப்படுகிறது.
வரலாறு
புகைப்பட கலைஞரும், கொரிய போர் வீரருமான மார்டின் ஹீட் என்பவர் வெண்பலகையை கண்டறிந்தார். அவர் தற்செயலாக ஒரு மார்க்கரைக்கொண்டு எழுதி அதனை துடைக்க முயன்றபோது, மார்க்கர் மையை மிகவும் எளிதாக அழிக்க முடியும் என புரிந்து கொண்டார் என்பதை உணர்ந்தார். அவர் போட்ட நெகடிவை பதிவு செய்யும் உலோகத்தை ஒத்த வெண்பலகையை உருவாக்கினார். ஒரு வர்த்தக நிகழ்ச்சியில் அவரது கண்டுபிடிப்பு வெளிவந்ததற்கு முன் இரவு அவரது முன்மாதிரி தீயில் அழிக்கப்பட்டது. மற்றொரு முன்மாதிரி உருவாக்கப்படுவதற்கு பதிலாக, அவர் தன்னுடைய காப்புரிமையை டி-மார்க்குக்கு விற்றார்.[2]
மேற்கோள்கள்
- "The History of Whiteboard Learning" (17 December 2014). பார்த்த நாள் 24 October 2016.
- "Who Invented the Dry Erase Board" (31 August 2014). பார்த்த நாள் 24 October 2016.