வெண்டி வில்லியம்சு

வெண்டி வில்லியம்சு அன்டர் (Wendy Williams Hunter வெண்டி ஜோன் வில்லியம்ஸ் 18, சூலை, 1964) என்பவர் அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகை, நூலாசிரியர், மற்றும் புதுமை வடிவமைப்பாளர் ஆவார். வானொலியிலும் பணியாற்றியவர். 2008 முதல் 'தி வெண்டி வில்லியம்ஸ் காட்சி நிரல்' தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

வானொலியில் இவருடய திறமைகள் பலரைக் கவர்ந்ததால் 2009 இல் தேசிய வானொலி ஆல் ஆப் பேம் என்பதில் சேர்க்கப்பட்டார்.

இவர் புத்தகங்கள் சிலவும் இவரைப் பற்றிய தன் வரலாறும் எழுதி இருக்கிறார். நகைகள் பிற நவ நாகரிகப் பொருள்கள் ஆகிவற்றைச் செய்வதும் சேகரிப்பதும் இவருடைய பணிகள் ஆகும்.[1]

பிறப்பும் படிப்பும்

அமெரிக்காவில் நியூ செர்சி, ஆசுபரி பார்க்கில் வெண்டி வில்லியம்சு பிறந்தார். சின்னப் பெண்ணாக இருக்கும்போதே, உரத்தக்குரலில் பேசுவதும் விரைவாகப் பேசுவதும் இயல்பாக அமைந்திருந்தன. பள்ளிப் படிப்பில் திறமை இல்லை. இருப்பினும் ஸ்கவுட் மாணவியாக, குழல் வாசிப்பவராக, நீச்சலில் வல்லவராக இருந்தார். பள்ளிக்கல்விக்குப் பிறகு நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். செய்தி மற்றும் இதழியல் துறைகளில் பட்டம் பெற்றார்.

மேலும் பார்க்க

http://www.wendyshow.com/

https://www.amazon.com/Wendy-Williams/e/B001IQXH4Q

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.