வீரை வெளியன் தித்தனார்

வீரை வளியன் தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகநானூறு 188 எண் கொண்ட ஒரே ஓரு பாடல் மட்டும் இவரால் பாடப்பட்டதாகச் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளது.

வீரை, ஊர்

வீரை எனபது ஊரின் பெயர். வீரை என்னும் சொல் வாழைமரத்தைக் குறிக்கும். 1 2 எனவே வீரை வாழைமரம் மிகுதியாக இருந்த ஊர் எனலாம். வீரகனூர் என இக்காலத்தில் வழங்கப்படும் ஊரின் சங்ககாலப் பெயர் வீரை என்பர். 3 திருப்பைஞ்ஞீலி என்னும் ஊரின் கோயில் வாழை மரத்தைக் காவல் ம்மரமாகக் (தலவிருச்சமாகக்) கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். சொல் மரபை எண்ணிப் பார்க்கும்போது வீரகனூரே புலவர் வாழ்ந்த ஊர் எனலாம்.

புலவர் பெயர்

புலவர் பெயர் தித்தனார். இவரது தந்தையின் பெயர் வெளியன்.
தந்தை வீரை வெளியனாரும் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.

பாடல் சொல்லும் செய்தி

தலைவன் தலைவியை அடைவதற்காக இரவில் வந்திருக்கிறான். தோழி பகலில் தினைப்புனம் காக்கும் இடத்துக்கு வந்தால் நல்லது என்கிறாள்.

மழை

போர்முரசு போல இடித்ததாம். போர்வாள் போல மின்னிற்றாம்.

தழலை, தட்டை

தினைப்புனம் காக்க உதவும் கருவிகள் இவை. வளைத்து நிமிர்த்தினால் ஒலி எழும்பும் கருவி தழலை. தட்டினால் ஒலி எழும்பும் கருவி தட்டை.

குறியிடம்

தழலும் தட்டையும் கொண்டு ஒலி எழுப்பிக் குறமகள் காக்கும் தினைப்புனத்திலும், மழையே! நீ பெய்வாயா? என்று மழையைக் கேட்பவள் போலத் தலைவியை அடையத் தலைவனுக்குக் குறியிடம் சொல்கிறாள் தோழி.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.