வீரமுனைச் செப்பேடு
பாலசிங்கனால் வீரர்முனையில் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டு அங்கு அரச குலத்தவர்கள் குடியேற்றப்பட்டதும் பாலசிங்க மன்னனால் அவ்வாலயம் தொடர்பான விடயங்களும் அதற்கு வழங்கப்பட்ட சொத்துக்களையும் மன்னன் செப்பேட்டில் பொறித்து அவ்வாலயத்தில் சேமிக்குமாறு பணித்தான். அவ்வாறு வீரர்முனையில் சேமிக்கப்பட்ட செப்பேடு வீரர்முனைச் செப்பேடு என வழங்கப்படுகின்றது. அது பின்வருமாறு [1]
கலிங்க தேசத்தின் கண்ணின் மணியாய் இலங்கப் பிறந்திடும் இராசாதி இராசனாம் உக்கிர சிங்கனின் உறைவிடம் கண்டி மிக்க புகழ் நின்ற விற்பனை கன்னிகை மருதப்புர வீக வல்லி என்பாளை பேருற மணந்து பெற்றிடும் மகனாம்
வால சிங்கனென வலிவுறு சிங்கம் வேல்விழி மாடவர் விரும்பிடு சிங்கம் குலைகள் அறுபத்து நான்கிலும் வலியன் தோலைவில் விண்ணில் துரிதமாய் செல்லும் முந்திர வித்தையும் மாண்புற கற்ற சுந்தர ரூபன் சோழநா டேகி
ஆரவா பாணன் அடியினை மறவா குமராங்குசனென கூறு பெயரினன் சுறறந்திடு சோழன் அருந்தவப்புதல்வி
சீர்பாத தேவியை திருமணம் செய்து
ஈழநாடேகி என்னும் கால் சோழ மாமன்னன் துணையாட்; களாய் முன்னர் குலத்து மக்களை அனுப்ப ஏண்ணம் கொண்டு இன்புடனாய்ந்து
திரு வெற்றியூர் சேர்ந்திடும் அயலிலும் பெருந்துறையூர் பின்னர் தன் மருங்கிலும் கட்டுமாவடி கரையிரு புறத்திலும் மட்டுக்கூங்கிய மறுபுறங்களிலும்
சிந்தன் பழையன் சீர்காங்கேயன் சந்திரசேகர சதாசிவச் செட்டி காலதேவன் கண்ணப்ப முதலி ஞாலம் புகழ் முத்து நாயக்கன் ஆச்சுத ஐயர் அவர்களது இச்சை மனைவியரும் இன்னும் பலரையும் சேர்த்துக் கப்பலில் சிவனை நினைத்து வுhழ்த்துக் கூறி வழியனுப்பியே செல்ல [2]
குப்பலும் கடல்மிசை அப்பனருளால் சேப்பம் தாகவே தீங்கெதுவும் இன்றி ஓடிவருங்கால் உயர்ந்தோர் நிதமும் புhடிப் பரவும் பரமனங் குசனாம் கோணேசர் வாழும் கோயில் முன்பாக நூனாதிக் கொன்றினும் நகராது நிற்க
ஓலம் ஓலமென் றுமையாள் கொஞ்சும் புhலனவனை பணிவுடன் வேண்டி நேர்ததை அறிய நேரிழை நல்லாள் தேர்ந்தவர் தமக்கும் செப்பவே அன்னார்
ஆழ்கடலில் இறங்கி இலசிப்பார்க்க நீள்புவி போற்றும் நிமலனைங்கரனின் திருவின் உருவச் சிலைதனை எடுத்து உருவிலேற்ற அரசனும் அரசியும்
எங்குதானோடினும் எம்மவரின் கப்பல் தங்குதடையின்றி தட்டினால் கரையில் அவ்விடம் ஆலயம் ஐயனே உனக்கு செவ்விதாய் அமைத்து சிறப்பொடு பூசனை நாடொறும் செய்வோம் நலம் புரிவாயென பாடிப்பரவி மன்றாடி யேநீர்
சிலையைத் தாங்குமத் தெய்வீகக்கப்பல் அலைகடல் மீதே அல்லலுறாமல் மட்டுக்களப்பு வாவியை அண்டி முட்டுப்படாமல் மோதி நில்லாமல் ஒரே திசையாயோடி உறைவிடம் இதுவென வீரர்முனைக்கரை விருப்புடன் நின்றதே
அரசனும் அரசியும் ஆனைமாமுகற்கு பரிவுடன் ஆலயம் பாங்குடன் அமைத்து சிந்தர் குலத்திர் தெய்வீகச் சிலையதை சிந்துயாத்திரைச் சின்னமென்றிருத்தி
மண்டலாபிசேகம் மாண்புறச் செய்து அண்டர்கள் போற்றும் ஐயனைப் பணிந்து சித்தி விநாயகர் சிந்து யாத்திரை பிள்ளையாரென பெயரும் சூட்டி
தக்கபுகழாவ தகுவிழா வமைத்து எக்காலத்துமிவ்விழா நிலைத்திட பக்குவம் செய்து பல்வகை வாத்தியம் தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம் தம்மோடு வந்த தமதுறவினரை செம்மனதுடனே திருக்கோயிற்பணி
புரியச் சொல்லி பூமி பகிர்ந்து துனித்தனியளித்து தான் வணங்கி வந்த துங்க வேலினையும் சாமிக்களித்து
முங்கள கீதம் பா மகிழ்வாய்ப் பாடி
ஓர் பெயரினால் ஓர் குலத்தவரென சீர்பாததேவி யென் திருப்பெயர் சூட்டி சீர்பாத குலம் சிறந்து விளங்கிட பேராக வென்னாளும் பெருகி வாழ்ந்திட
ஆரவிந்த மலரும் அழகுசெங் கோல்கொடி துரமாய்ப் பொறித்த தனிவிரு தேந்தி அரசகுலமென அன்பாய் வாழ்த்திட வாழ்த்தி நல்லாசி வழங்கவே பாலசிங்கன் தாழ்த்திச் சிரமது தான் பணிந்தனரே
சாசணம் கிண்ணறையன் வெளி கீற்றுத்துண்டு மல்வத்தை வெளி மல்வத்தை குளம் தரவை முன்மாரி சரிசம மாகிவிடும் கரந்தை முன்மாரி கனசிறு நிலங்கள் நரசிங்க னென நற்பெயர் பெறும் வால சிங்கனுமே மானியமாக சாசன மெழுதி சகலருக்குமீந்தான்[3]