வீச்சுப் பண்பேற்றம்

வீச்சுப் பண்பேற்றம் அல்லது வீச்சு மட்டிசைப்பு (Amplitude modulation)(AM) என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் (carrier wave) மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அலைகளைக் கொண்டு செல்வதில் வீச்சுப் பண்பேற்றம் பயன்படுகின்றது.[1]

உரு1: ஒலிச் சமிக்கை ஒன்று (மேல்) வீச்சுப் பண்பேற்றம் அல்லது அதிர்வெண் பண்பேற்றம் மூலம் காவப்படுவதிக் காட்டும் அலை
இடது பகுதி: பண்பேற்ற சமிக்கை. வலது பகுதி: வீச்சு மட்டிசைப்பின் காவி மூலமான அதிவெண் கற்றை

நியம AM அலை குறித்த கணிப்பு முறை

அதிர்வெண் fc ஐயும் வீச்சம் A ஐயும் கொண்ட காவி அலை (sine அலை) ஒன்றைக் கருதுக. அது பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.

.

m(t) பண்பேற்றம் பெற்ற அலைவடிவம். இவ் எடுத்துக்காட்டுக்கு சைன் அலை கொண்ட அதிர்வெண் fmபண்பேற்றத்தையும், அது அதை விட மிகச்சிறிய அதிர்வென் fc எடுத்தால்:

,

இங்கு M மட்டிசைப்பின் வீச்சம். M<1 ஆக் இருப்பின் (1+m(t)) எப்போதும் நேர்ப் பெறுமானத்தைக் கொள்ளும். எனவே வீச்சுப் பண்பேற்றம் என்பது காவி அலை c(t) ஐ நேர்க் கணியமாயுள்ள (1+m(t)) உடன் பெருக்குவதால் கிடைக்கும்:

மேற்கோள்கள்

  1. David B. Rutledge (1999). The Electronics of Radio. Cambridge University Press. பக். 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-64645-1. https://books.google.com/?id=ZvJYLhk4N64C&pg=RA2-PA310&dq=radio-teletype+fsk.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.