வீக்தர் செர்கேயெவிச் சப்ரனோவ்

வீக்தர் செர்கேயெவிச் சஃப்ரனோவ் (Viktor Sergeevich Safronov) (உருசியம்: Ви́ктор Серге́евич Сафро́нов) (பிறப்பு: வெலிகீ இலுகி உருசியா, 11 அக்தோபர் 1917 – இறப்பு: மாஸ்கோ 18 செப்டம்பர் 1999) ஒரு சோவியத்/உருசிய வானியலாளர் ஆவார், இவர்கோளுருவாக்கத்தில் குறைபொருண்மை ஒண்முகில் படிமத்தை மொழிந்தவர். இது சூரியனைச் சூழ்ந்த வளிம வட்டில் இருந்து கோள்கள் உருவாகியதாகக் கூறுகிறது.

வாழ்க்கை

இவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின் இயக்கவியல், கணிதவியல் துறையில் 1941 இல் தன் இளவல் பட்டத்தைப் பெற்றார். இவர் தன் முணைவர் பட்டத்துக்காக இயற்பியல்சார் கணிதவியலில் ஆய்வுரை 1968 இல் வழங்கினார். இஅரது ஆர்வம் கோள் அறிவியலிலும் வானியற்பியலிலும் புவி இயற்பியலிலும் குவியம் கொண்டிருந்தது.

தகைமைகள்

இவரது கோள் உருவாக்கத்துக்கான சிறுகோள்வட்டுக் (Planetismal) கருதுகோள் சார்ந்த கோட்பாடு இன்னமும் பலரால் பரவலாக ஏற்கப்படுகிறது என்றாலும் முந்துகோள் வட்டின் ஈர்ப்புவழித் துண்டமாதலால் கோள்கள் உருவாதல் போன்ற மாற்றுக் கோட்பாட்டுக் கருதுகோள்களும் நிலவுகின்றன.

அமெரிக்க வானியலாளர் எட்வார்டு எல். ஜி. போவெல் 1983 இல் கண்டுபிடித்த 3615 சப்ரோனவ் சிறுகோள் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.<ref>


விருதுகள்சோவியத் அறிவியல் கல்விக்கழகம்

  • ஆட்டோ சுகிமிடு பரிசு, சோவியத் அறிவியல் கல்விக்கழகம் (1974)
  • இலியோனார்டு பரிசு, வானிலையியல் கழகம் (1989)
  • கோள் அறிவியலுக்கான கியூப்பர் பரிசு (1990)

வெளியீடுகள்

  • Evolution of the Protoplanetary Cloud and Formation of the Earth and the Planets. Moscow: Nauka Press, 1969. Trans. NASA TTF 677, 1972.

மேலும் காண்க

  • அகந்திரளுதல் (வானியற்பியல்)

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.