விவேகானந்தா தமிழ்ப்பள்ளி
விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளியாகும். பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, பிரிக்பில்டு தமிழ்ப்பள்ளி என்று ஒரே பெயர் கொண்ட இரண்டு தமிழ்ப்பள்ளிகள் உண்டு. முன்னது பெட்டாலிங் ஜெயா மாநகரிலும் பின்னது கோலாலம்பூர் மாநகரிலும் இருக்கின்றது.
விவேகானந்தா தமிழ்பள்ளி SJK(T) Vivekananda | |
---|---|
தகவல் | |
வகை | இரு பாலர் பயிலும் பள்ளி |
பள்ளி மாவட்டம் | பெட்டாலிங் ஜெயா |
கல்வி ஆணையம் | மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி |
பள்ளி இலக்கம் | BBD8458 |
தலைமை ஆசிரியர் | திருமதி பஞ்சினியம்மாள் |
தரங்கள் | 1 முதல் 6 வகுப்பு வரை |
மாணவர்கள் | 657 மாணவர்கள் |
கல்வி முறை | மலேசியக் கல்வித்திட்டம் |
வரலாறு
1950- ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெட்டாலிங் ஜெயா மையத்தில் ஒரு தமிழ்பள்ளியைக் காண முடியவில்லை. அவ்வகையில் 6.1.1958-ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயா பழைய அரசாங்க அலுவலகத்தில் (Old Office of the Petaling Jaya Authority) விவேகானந்த ஆசிரமத்தினர் ஒரு தமிழ்ப்பள்ளியை நிறுவினார்கள். இப்பள்ளி W.F.G லா பேய்லி என்னும் பெட்டாலிங் ஜெயா தலைமை நிர்வாக அதிகாரியால் திறப்பு விழாக் கண்டது.
இப்பள்ளிக்கு மாணவர்களைத் திரட்ட விவேகானந்தா ஆசிரம நிர்வாகிகளுள் திரு.கந்தையா, திரு.ஆறுமுகம், திரு.அ.காசிப்பிள்ளை போன்றோர் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் தமிழர்களின் வீடுகளுக்குள் சென்று தமிழ்க்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர் மாணவர்கள் பள்ளிக்குப் பதிவும் செய்தனர்.
விவேகானந்தா ஆசிரமத்தாரின் சீரிய கண்காணிப்பால் வளர்ச்சியடைந்து வந்த இப்பள்ளி அதிக மாணவர்களை ஈர்த்தது. அதனால், இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண ஆசிரம நிர்வாகத்தினர் சிலாங்கூர் மாநில அரசாங்கட்த்தின் உதவியை நாடுனர். இவர்களின் முயற்சியால் ஜாலான் டெம்பளலிருந்து மூன்று ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிக் கட்டிடம் நிறுவ விவேகானந்தா ஆசிரமத்திற்கு அளிக்கப்பட்டது.
இந்நிலத்தில் ஆசிரம் நிர்வாகத்தினர் 3 வகுப்பறைகள், ஒரு தலைமையாசிரியர் அறை, ஒரு சிற்றுண்டிச் சாலை மற்றும் மாணவர்கள் பயன்படுத்துவதற்குக் கழிப்பறை ஆகியவற்றைக் காட்டுவதற்கு முடிவெடுத்தனர். மலேசியாவில் சிறந்த வர்த்தகரான உயர்த்திரு க்.வ்.ஆள்.ம் இராமநாதன் செட்டியார் அவர்கள் 12.11.1959 ஆம் நாள் அக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 30.10.1960—ஆம் நாள் அச்சமயத்தில் கல்வி அமைச்சராக இருந்து அப்துல் ரஹ்மான் பின் ஹரி தலிப் (அப்துல் ரஹ்மான் பின் ஹஜி டலிப்) அவர்கள் அப்பள்ளியைத் திற்றந்து வைத்தார். பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வளர்ச்சி தோட்டப்புற வாழ் இந்திய மக்களை வெகுவாக ஈர்த்த்து. தோட்டப்புற மக்களும் அந்நகரில் குடியேறினர். இதனால், பெட்டாலிங் விவேகானந்தா தமிழ்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
1959-ஆம் ஆண்டு 35 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி ஈராண்களுக்குப் பிறகு 1961-ஆம் ஆண்டு 200 மாணவர்களைக் கொண்டு பீடுநடை போட்டது. ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க விவேகானந்தா ஆசிரமத்தினர் 1967-ஆம் ஆண்டு ஆறு வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்தையும் கட்டினார்கள். 15.01.1984-ஆம், நாள் அப்போதைய மலேசியப் பொதுப் பணித்துறை அமைச்சர் மான்புமிகு டத்தோ ஶ்ரீ ச.சாமிவேலு அவர்கள் அப்புதிய கட்டித்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியைத் தொடங்கி வைத்தார்.
1989-ஆம் ஆண்டு மேலும் ஆறு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தை விவேகானந்தா ஆசிரமம் கட்டிக்கொடுத்தது. 1991-ஆம் ஆண்டு மேலும் 3 வகுப்புகளைக் கொண்ட கட்டிடமும் கட்டப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை 2,300-ஐ அடைந்தது. உலகிலேயே அதிக மாணவர்களைக் கொண்ட தொடக்க நிலைத் தமிழ்ப்பள்ளியை மேலும் விரிவுபடுத்த விவேகானந்தா ஆசிரமம் 1992-ஆம் ஆண்டு ஒன்பது வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தது.
தலைமையாசிரியர்கள்
விவேகானந்தா தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களின் பட்டியல்:
எண் | பெயர் | ஆண்டு |
---|---|---|
1 | குமாரி.சாவித்திரி | 1958-1959 |
2 | திரு.காசிப்பிள்ளை | 1959-1972 |
3 | திரு.சோதிநாதன் | 1972-1982 |
4 | திரு.பொன்னழகு | 1983-1989 |
5 | திரு.செல்வராஜன் | 1991-1996 |
6 | திரு.ஆறுமுகம் | 1997-1999 |
7 | திரு. செல்லையா | 1999-2001 |
8 | திரு.புத்திரன் | 2001-2004 |
9 | திரு.பாலமோகன் | 2004-2014 |
10 | திருமதி.பஞ்சினியம்மாள் | 2014- |
பள்ளி நிர்வாகம்
- தலைமையாசிரியர்: திருமதி மு. பஞ்சினியம்மாள்
- துணைத் தலைமையாசிரியர் (கலைத் திட்டம்): திருமதி. மு.பூங்கோதை
- பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்: திரு. முனியாண்டி
பொது