விளையாட்டு பிள்ளை

விளையாட்டு பிள்ளை (Vilaiyaattu Pillai) ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 1970 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த விகடன் என்ற பத்திரிக்கையில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "ராவ் பகதூர் சிங்காரம்" என்று தொடர்கதையாக வந்த புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.. இப்படத்தில் சிவாஜி கணேசன்,பத்மினி,காஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாதிரங்களில் தோன்றி நடித்துள்ளனர். இத்திரைப்படம் மாட்டு வண்டி வீரனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் பற்றியது. விளையாட்டு பிள்ளை 1979 பிப்ரவரி 20 ல் வெளிவந்து 100 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியது.

விளையாட்டு பிள்ளை
இயக்கம்ஏ.பி.நாகராஜன்
தயாரிப்புஜெமினி ஸ்டுடியோஸ்
மூலக்கதைவார்ப்புரு:மூலக்கதை
திரைக்கதைஎஸ்.எஸ்.வாசன்
இசைகே.வி.மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
காஞ்சனா
ஒளிப்பதிவுகே.எஸ்.பிரசாத்
படத்தொகுப்புஎம்.உமாநாத்
கலையகம்ஜெமினி ஸ்டுடியோஸ்
வெளியீடுவார்ப்புரு:வெளிவந்த நாள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

நீலமணி என்ற காளையை முத்தையா (சிவாஜி கணேசன்) என்ற இளைஞன் அடக்குவது போல கதை ஆரம்பம் ஆகிறது. வி.எஸ். ராகவன் என்ற செல்வந்தரின் மகள் மகரகதம் (பத்மினி) நீலமணி என்ற காளையை வளர்த்து பேணி வருகிறாள், மரகதம் முத்தையாவிடம் அவ்வூரில் நடைபெறவுள்ள மாட்டு வண்டிப் பந்தயத்தில் கலந்து கொண்டு தன்னுடைய காளையிடம் வெற்றி பெற சவால் விடுகிறாள்.முத்தையாவின் வெற்றிக்குப் பிறகு, மரகதம் அவனைக் காதலிக்கிறாள்.

முத்தையாவின் வெற்றியினால் அவனது தாயார் (லக்ஷ்மி), மகிழ்ச்சியடைகிறார். அவன் விளையாட்டு பிள்ளையாக இருப்பதால், அவனை திருமணம் செய்து, பொறுப்புடன் வாழ்வதற்கு அறிவுறுத்துகிறார். முத்தையாவின் உறவினர் (பாலையா) தான் மரகதத்தின் தந்தையாரிடம் பேசி முத்தையாவுக்கும் மரகதத்திற்குமிடையே திருமணத்தை நடத்திட ஏற்பாடுகள் செய்யவதாக் கூறிச் செல்கிறார். ஆனால் அவரது மனம் வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது. முத்தையாவிற்குப் பதிலாக, மரகதத்தை மோசமான குணங்களைக் கொண்ட தனது மகனுக்கு (சோ ராமசாமியை) திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டுகிறார். ராமசாமியை திருமணம் செய்துகொள்ளப் போகும் நாளன்று, முத்தையாவும் மரகதமும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பிரபாகர் என்ற மகன் பிறக்கிறான்.ஒரு நாள் யானையொன்று கட்டுக்கடங்காமல் போகிறது. முத்தையா லாவகமாக அதைக் கட்டுப்படுத்தி இளவரசியை (காஞ்சனா) காப்பாற்றுகிறான்.முத்தையாவின் செயலால் மகிழ்ந்த இளவரசி அவனது குடும்பத்துடன் அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறார்.

அரச குடும்பத்தின் சமையல்காரனுக்கு முத்தையாவின் மீது பொறாமை உண்டாகிறது. என்வே முத்தையாவின் மதிப்பைக் கெடுக்க எண்ணிய அவன் முத்தையா மற்றும் இளவரசியைப் பற்றிய வதந்திகளை பரப்புகிறான். கொம்பில் நஞ்சு தடவிய மாட்டினை அடக்குமாறு முத்தையாவிடம் கூறுகிறான். அதில் வெற்றி பெற்ற முத்தையா, பின்னர் அவனது குடும்பத்துடன் வளமாகவும் மற்றும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறான்.[1]

நடிகர்கள்

  • முத்தையாவாக சிவாஜி கணேசன்
  • மரகதமாக பத்மினி
  • இளவரசியாக காஞ்சனா
  • மாணிக்கமாக சிவக்குமார்
  • முத்தையாவின் தாயாரக எஸ்.என்.லட்சுமி
  • முத்தையாவின் உறவினராக டி.எஸ்.பாலையா
  • பாலையாவின் மகனாகசோ ராமசாமி
  • மற்றும் பலர்

தயாரிப்பு

ஆனந்த விகடன் என்ற பத்திரிக்கையில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ராவ் பகதூர் சிங்காரம்" என்ற புதினத்தின் அடிப்படையாகக் கொண்டது.ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இக்கதையைப் படமாக்க எண்ணி விளையாட்டு பிள்ளை என்ற பெயரில் வெளியிட்டது ,[2] ஏ.பி.நாகராஜன் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். திரைக்கதையை ஜெமினி ஸ்டுடியோஸ் அதிபர் எஸ்.எஸ்.வாசன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை கே.எஸ்.பிரசாத் மேற்கொள்ள படத்தொகுப்பை எம்.உமாநாத் கவனித்துக்கொண்டார்.[1] Filming took place prominently in Mysore.[3] தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே தமிழ்நாட்டின் விளையாட்டான மாட்டு வண்டிப் பந்தயத்தை கொண்டு முதன்முதலில் எடுக்கப்பட்ட படமென தான் நம்புவதாக ராண்டர்கை என்ற எழுத்தாளர் கருத்து கூறினார். இதன் படபிடிப்பின் போதே 1969 ல் எஸ்.எஸ்.வாசன் காலமானார். அவரது நினைவாக இப்படம் அவருக்கு அர்பணிக்கப்பட்டது.[1]

ஒலியமைப்பு

சங்கரதாஸ் சுவாமிகள் மற்றும் கண்ணதாசன் பாடல்களை இயற்ற கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார். டி.எம். செளந்தர்ராஜன்,பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.[1]

வெளியீடும் வரவேற்பும்

விளையாட்டு பிள்ளை 1970 பிப்ரவரி 20ம் நாள் வெளியிடப்பட்டது .[4] தி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை படத்தைப் பற்றி எழுதுகையில் அதன் நீளத்தை குறைகூறியது, ஆனால் யானை மற்றும் மாட்டு வண்டி பந்தயக் காட்சிகளை பாராட்டியது. டி.எஸ்.பாலையா, பத்மினி மற்றும் சிவக்குமார் ஆகியவற்றின் நடிப்பை பாராட்டியது. காஞ்சனாவின் பாத்திரம் சரியாக வரையறுக்கப்படவில்லை என்று கூறியதுடன், ஒட்டுமொத்தமாக திறமைகள் வீணடிக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்தது.[5] இருந்த போதிலும் படம் வெளிவந்து 100 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடியது..[6] ராண்டர்கை, கதை மிகவும் அருமையாக உள்ளதெனவும் சிவாஜிகணேசன்,பத்மினி,டி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன் மற்றும் சோ ஆகியோர் வெகு சிறப்பாக நடித்திருப்பதாகவும் எழுதினார்.n."[1]

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.