விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி

விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி (Vladimir Aleksandrovich Albitzky) (உருசியம்: Владимир Александрович Альбицкий) (ஜூன் 16, 1891 – ஜூன் 15, 1952)ஒரு சோவியத் ஒன்றிய/உருசிய வானியலாளர். இவரது சிறுகோள் கண்டுபிடிப்புகள் "வி. அல்பித்சுகிய்" என்ற பெயரில் வழங்குகின்றன..

கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள்கள்: 10
1002 ஓல்பெர்சியாஆகத்து 15, 1923
1007 பாவ்லோவியாஅக்டோபர் 5, 1923
1022 ஒலிம்பியாடாஜூன் 23, 1924
1028 இலிடினாநவம்பர் 6, 1923
1030 வித்யாமே 25, 1924
1034 மொசார்ழ்சியாசெப்டம்பர் 7, 1924
1059 முசோர்குசுகியாஜூலை 19, 1925
1071 பிரிதாமார்ச் 3, 1924
1283 கோம்சொமோலியாசெப்டம்பர் 25, 1925
1330 சுபிரிடோனியாபிப்ரவரி 17, 1925

இவர் 1922 இல் கிரீமியாவில் உள்ல சிமீழ்சு வான்காணகத்துக்கு வந்தார். இவர் கிரகொரி ஆபிராமோவிச் சாயின், கிரகொரி நியூய்மின் ஆகியவர்களுடன் பணிபுரிந்தார்.

இவர் பல சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.

ஆய்வுத் தாள்கள்

புல்கோவோ வான்காணக ஆவணப்படி இவர் 88 ஆய்வுத் தாள்கள் அனுப்பியுள்ளார். நாசாவில் இவரது 5 ஆய்வுத் தாள்களே கிடைக்கின்றன. மற்றவை, சிறுகோள்களின் கண்டுபிடிப்புகள் உட்பட, அலெக்சு கைனா ஆவணப் படிகளாகவே கிடைக்கின்றன.

இவரது 343 விண்மீன்களின் ஆர விரைவுகளின் ப்திவுகள் கீழ்வரும் இணையத் தளத்தில் காணலாம்:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.