விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ

விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ (Vladislav Vladimirovich Shevchenko) (உருசியம்: Владислав Владимирович Шевченко, பிறப்பு: 18 ஜூன் 1940) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் நிலாத்தேட்டத்துக்காகப் பெயர்போனவர். இவர் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தின் சுடென்பர்கு அரசு வானியல் நிறுவன, நிலா, கோள் ஆராய்ச்சி துறையின் தலைவரும் ஆவார்.

விளாதிசுலாவ் விளாதிமிரோவிச் செவ்செங்கோ
பிறப்பு18 சூன் 1940 (age 79)
பணிவானியல் வல்லுநர்
வேலை வழங்குபவர்

தகைமைகள்

  • 1978 முதல் அண்மை வரை – பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் நிலாச் செயல்பாட்டுக் குழுவின் தலைவர்; கோள் அமைப்பு பெயரீட்டுச் செயல் குழு உறுப்பினர்.
  • 1991-1995 – அமெரிக்க குடிமைப் பொறியியல் கழகத்தின் நிலா அடிப்படைக் கட்டமைப்பு செயலூக்கக் குழுவின் உறுப்பினர்.
  • 1978-1997 – உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் மன்ற நிலா, அறிவன் (புதன்) செயல் குழுவின் தலைவர்.
  • 1989-1993 – பன்னாட்டு அருஞ்சூழல் வடிவமைப்புக் கழக உறுப்பினர் (IDEEA உறுப்பினர்).
  • 1993-1997 - சூரியக் குடும்ப ஆராய்ச்சி (Solar System research) (உருசிய அறிவியல் கல்விக்கழகப் பருவமுறை இதழ்) .
  • 1990-1997 - புவியும் புடவியும் (The Earth and the Universe) (உருசிய அறிவியல் கல்விக்கழகப் பருவமுறை இதழ்) ஆசிரியர் குழு உறுப்பினர்.
  • பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினர் (ஆணையம் 16).
  • பன்னாட்டு வானியல் கழக உறுப்பினர்.
  • பன்னாட்டுப் புவி இயற்பியல், புவியளவையியல் ஒன்றிய உறுப்பினர்.
  • கோஸ்பார் (COSPAR) உறுப்பினர்.

வெளி இணைப்புகள்

Source: http://selena.sai.msu.ru/Shev/ShevE.htm

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.