வில்லை (வடிவவியல்)
வடிவவியலில் வில்லை (lens) என்பது இருபுறம் குவிந்துள்ள ஒரு வடிவமைப்பு ஆகும். இவ்வடிவம் இரு வட்ட விற்களால் அடைவுபெற்றிருக்கும். சம ஆரங்கொண்ட இரு வட்ட விற்களாலான வில்லைகள் சமச்சீர் வில்லைகள் எனவும், சமமற்ற ஆரங்கொண்ட இரு வட்ட விற்களாலான வில்லைகள் சமச்சீரற்ற வில்லைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. பிறை ஒரு குழிவு-குவிவு வடிவம் கொண்டதாகும்.

O1, O2 புள்ளிகளை மையங்களாகவும் R அளவு ஆரமுங்கொண்ட இரு வட்டவிற்களாலான வில்லை
பொதுவாக ஒளிவியலில் பயன்படுத்தப்படும் வில்லையானது ஒரு முப்பரிமாண வடிவம். இது இருபரிமாண வில்லையொன்றை அதன் சமச்சீர் அச்சைப் பொறுத்து சுழற்றுவதால் பெறப்படுகிறது.
மேற்கோள்கள்
- Eric W. Weisstein.. "Lens". MathWorld. பார்த்த நாள் June 13, 2005. which in turn cites
- Pedoe, D. (1995). "Circles: A Mathematical View, rev. ed.". Washington, DC: Math. Assoc. Amer..
- Plummer, H. (1960). An Introductory Treatise of Dynamical Astronomy. York: Dover.
- Watson, G. N. (1966). A Treatise on the Theory of Bessel Functions, 2nd ed.. Cambridge, England: Cambridge University Press.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.