வில்லியம் டி. கூலிட்ச்

வில்லியம் டி கூலிட்ஜ் (Willaim D. Coolidge, அக்டோபர் 23, 1873 - பெப்ரவரி 3, 1975) ஓர் அமெரிக்க இயற்பியலாளர். இவர் எக்சு கதிர் கருவிகளின் மேம்பாட்டில் முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளார். மாசாசூசெட்சின் அருகிலுள்ள அட்சன் எனும் ஊருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பிறந்தார். 1891 முதல் 1996 வரையிலும் எம்.ஐ.டி யில் மின் பொறியியல் பயின்றார். இரு ஆண்டுகள் அங்கு ஆய்வகத் துணைவராகப் பணிபரிந்தார். மேல்படிப்பிற்காக செருமனி சென்று லிப்சிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாடு திரும்பி எம்.ஐ.டி. யில் வேதியியல் துறையில் பேரா. ஆர்தர் ஏ. நாய்சு அவர்களின் துணைவராக 1899 முதல் 1905 வரையிலும் பணிபுரிந்தார்.

வில்லியம் டி. கூலிட்ச்
William D. Coolidge
பிறப்புஅக்டோபர் 23, 1873
அட்சன், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 3, 1975(1975-02-03) (அகவை 101)
நியூயோர்க்
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைமின்பொறியியல்
கல்வி கற்ற இடங்கள்லீப்சிக் பல்கலைக்கழகம்
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்

இவர் ஜெனரல் எலக்ட்ரிக்கின் ஆய்வகச் சோதனைச்சாலையின் இயக்குனராகவும் பின் அதன் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் இழை மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய டங்ஸ்டனாலான மெல்லிய கம்பியினைப் பயன்படுத்தினார்.இதற்கானக் காப்புரிமையினையும் பெற்றார்.

எக்சு கதிர்த் துறையில் இவரது முக்கிய பங்களிப்பு, வெப்ப எலக்ட்ரான்களை உமிழும் டங்ஸ்டன் கம்பிச்சுருளை எதிர்மின் முனையாக பயன்படுத்தியதாகும். இதனால் சீரான குழல் மின்னோட்டம் பெற ஏதுவாயிற்று. சிறப்பான கதிர்ப் படம் கிடைக்கிறது. இன்றளவும் பயன்பாட்டிலுள்ளன.சுழலும் நேர்மின்முனை எக்சு கதிர் குழாய் அமைத்ததும் இவரே.இதற்கான காப்புரிமை 1916-ல் பெற்றார்.

பெற்ற சிறப்புகள்;

1914 லில் இரம்போர்ட் பரிசு,

1926 ல்கோவார்ட் என் பாட் பதக்கம்,

1927 ல் எடிசன் பதக்கம்,

1927 ல் லுயிசு இ லெவி பதக்கம்,

1939 ல் ஃபாரடே பதக்கம்,

1944 ல் ஃபிராங்லின் பதக்கம் முதலியன ஆகும்.

தேசிய புகழ்பெற்றக் கண்டுபிடிப்பாளர் அரங்கிற்கும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.தனது 101 வயதில் இயற்கை எய்தினார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.