வில்லியம் கீலிங்

கப்டன் வில்லியம் கீலிங் (William Keeling, 1578–1620) பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த பிரித்தானியக் கடற்படைத் தலைவர். இவர் 1604 ஆம் ஆண்டில் சுசானா என்ற கிழக்கிந்தியக் கம்பனியின் இரண்டாவது கப்பற் பயணத்தையும், பின்னர் 1607 ஆம் ஆண்டில் ரெட் டிராகன் என்ற மூன்றாவது கப்பல் பயணத்தையும் வழிநடத்தினார். இவரது பயனத்தின் போது ஜாவாவில் இருந்து இங்கிலாந்து திரும்பும் வழியில் 1609 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் கொக்கோசு (கீலிங்) தீவுகளைக் கண்டுபிடித்தார். இவரது நினைவாக இத்தீவுகளுக்கு இவரது பெயர் இடப்பட்டது. 1618 இல் இவர் கோவ்ஸ் காசில் கப்பலுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இங்கிலாந்தின் வைட் தீவில் 1620 இல் இறந்தார்.

வில்லியம் கீலிங்
பிறப்பு1578
இறப்பு1620
வைட்டுத் தீவு
பணிதேடலாய்வாளர்
கொக்கோசு (கீலிங்) தீவுகளின் அமைவிடம்

கீலிங் எழுதிய நாட்குறிப்புகளின் ஒரு பகுதி பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்குறிப்பில் 1607, 1608 ஆம் ஆண்டுகளில் அவரது கப்பலில் அரங்கேறிய ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் மற்றும் இரண்டாம் ரிச்சார்ட் நாடகங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன[1].

மேற்கோள்கள்

  1. Halliday, F. E. A Shakespeare Companion 15641964. Baltimore, Penguin, 1964; pp. 262, 426-7.

வெளி இனைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.