வில்ஃபிரட் ஓவன்

வில்ஃபிரட் ஓவன் (Wilfred Owen, பி. மார்ச் 18, 1893 - இ. நவம்பர் 4, 1918) ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் படைவீரர். இவர் முதலாம் உலகப் போரின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். போர் நடந்த காலகட்டத்தில் போரையும் அதன் பின்னணி அரசியலையும் ஆதரித்து பரப்புரைக் கவிதைகளே வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், போர் முனையிலிருந்து கொண்டே போரின் கடுமையினையும் உண்மையையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஓவன் எழுதிய கவிதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஓவனின் நண்பரும் சக கவிஞருமான சிக்ஃபிரைட் சாசூன் சாதாரண போர் வீரனாக இருந்த ஓவனைக் கவிதை எழுதத் தூண்டினார். பதுங்கு குழி போர் முறையின் கொடூரங்களையும், நச்சுப்புகை தாக்குதல்களின் அவலங்களையும் ஓவனின் கவிதைகள் துல்லியமாக படம்பிடித்துக் காட்டின. 1918ல் போர் முடிவதற்கு ஒரு வாரம் முன்னர் போர்க்களத்தில் ஓவன் கொல்லப்பட்டார். 1919ல் அவரது கவிதைகள் அடங்கிய தொகுப்பு வெளியானது. வெளியாகி சுமார் நூறாண்டுகள் கடந்த பின்னரும், போர்க் கவிதை மரபில் ஓவன் அழியாத இடம் பெற்றிருக்கிறார். அவரது கவிதைகள் உலகெங்கும் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் இடம் பெற்று வருகின்றன.

வில்ஃபிரட் ஓவன்

பிறப்பு {{{birthname}}}
மார்ச்சு 18, 1893(1893-03-18)
ஓஸ்வெஸ்ட்ரி, ஷ்ராப்ஷையர், ஐக்கிய இராச்சியம்
இறப்பு 4 நவம்பர் 1918(1918-11-04) (அகவை 25)
சாம்பர்-ஆய்ஸ் கால்வாய், பிரான்ஸ்
நாடு பிரிட்டானியர்
எழுதிய காலம் முதலாம் உலகப் போர்
இலக்கிய வகை போர் கவிதை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஸ்ட்ரேஞ் மீட்டிங்க், ஆந்தெம் ஃபார் தி டூம்ட் யூத், டல்சே எட் டெகோரம் எஸ்ட், ஃப்யூடிலிட்டி
http://www.wilfredowen.org.uk/home/

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.