விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது நற்றிணை 298 எண் கொண்ட பாடலாக வருகிறது.
பொன்னையும், நாணயங்களையும் உரசி அதன் வண்ணம் (வருணத் தரம்) பார்போர் வண்ணக்கன் எனப்பட்டனர்
- திணை - பாலை
தலைவன் பொருளுக்காகப் பிரிய ஒருபுறம் நினைக்கிறான். மற்றொருபுறம் கரும்பு போல் இனிக்கும் தன் காதலியின் தோளையும், கூடல் நகரை அடுத்த பெருமலையில் (பெருமை மிக்க திருப்பரங்குன்றம்) பூத்த மலர்மணம் கமழும் கூந்தலையும் கொண்ட தன் காதலியை நினைக்கிறான். இறுதியில் பொருட்பிரிவைக் கைவிட்டுவிட்டுக் காதலியுடன் தங்கிவிடுகிறான்.
அவன் செல்ல நினைத்த வழி
பாலைநில ஆடவர் தண்ணுமை முழக்கத்துடன் வழிப்பறி செய்வர். பறவைகளையும் பிடிப்பர்.
இந்த முழக்கத்தைக் கேட்டுக் கழுகுகளே பறந்தோடிப்போய் தன் இனத்தோடு சேர்ந்துகொள்ளுமாம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.