வியட்நாமில் தொலைத்தொடர்புகள்

வியட்நாமில் தொலைத்தொடர்புகள் (Communications in Vietnam) தொலைபேசிகள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றை உள்ளடக்கும்.

தொலைபேசிகள்

வியட்நாம் தன் தொலைத்தொடர்பு அமைப்புகலைப் புதுப்பித்து விரிவாக்க பெருமுயற்சி எடுத்து வருகிறது. உள்நாட்டில் அனைத்து வட்டார இணைப்பகங்களும் கணினிமயப் படுத்தி கனாயுடன் இணைக்கப்பட்டுள்ளன, தா நாங் , ஓச்சிமின் நகரம் ஆகியவை ஒளியிழை வட்த்தால் அல்லது நூண்ணலை வானொலி அஞ்சல் வலையிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தொடர்கள் கணிசமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. அலைபேசிகள் வேகமாகப் பெருகி வருகின்றன. 2012 அளவில், 134 மில்லியன் அலைபேசி முகவர்கள் இணைந்து வியட்நாம் உலகில் ஆறாம் இடத்தில் உள்ளது.[1]

இரு செயற்கைக்கோள் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன:இண்டர்சுபுட்னிக் ( Intersputnik), (இந்தியப் பெருங்கடல் வட்டாரம்).

வியட்நாம் அஞ்சல், தொலைத்தொடர்புக் குழு (பொது அஞ்சல், தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பிரிந்த குழுமம்) தொலைத்தொடர்பு அமைப்பை இயக்குகிறது. 1990 இல் ஒழுகுமுறையும் வணிக இயக்கமும் பிரிக்கப்பட்டபோது இது உருவாக்கப்பட்டது.தனி ஒழுங்குமுறை அமைப்பு உருவாகியதும் அலைபேசிகட்கான சந்தைப் பிரிவுகள் 1995 இல் போட்டிக்குத் திறக்கப்பட்டன. பன்னாட்டுச் சேவைச் சந்தையும் 2000 இல் திறக்கப்பட்டது.

அலைபேசி வலைப்பின்னல்கள்

  • வியட்டெல் மொபைல் (Viettel Mobile) ( வியட்டெல் குழுமத்தின் நேரடிப் பார்வையில்.): 096, 097, 098, 0162, 0163, 0164, 0165, 0166, 0167, 0168, 0169[2]
  • மோபிஃபோன் (MobiFone) ( VMS இன் நேரடிப் பார்வையில்): 090, 093, 0120, 0121, 0122, 0126, 0128[3]
  • வீனாஃபோன் (VinaPhone) (VNPT இன் நேரடிப் பார்வையில்): 091, 094, 0123, 0125, 0127, 0129 [4]
  • எசு-ஃபோன் (S-Fone) ( CDMA S-Telecom இன் நேரடிப் பார்வையில்): 095[5]
  • வியட்நாமொபைல் (Vietnamobile) (முந்தைய எச் ட்டி மொபைல் (HT Mobile)): 092, 0188 [6]
  • பீலைன் (Beeline) (G-Tel இன் நேரடிப் பார்வையில்): 0199[7]

2013 தொடக்கத்தில் பிற அலைபேசி இயக்குபவர்களின் கடும்போட்டியால் எசு-ஃபோனும் பீலைனும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.[8][9] பீலைன் மீண்டும் 2009 இல் சந்தையில் இயங்கத் தொடங்கியது .

ஒலிபரப்பு/ஒளிபரப்பு ஊடகங்கள்

அனைத்து ஒலி/ஒளி பரப்பு ஊடகங்களையும் அரசு தகவல். தொலித்தொடர்பு அமைச்சகத்தின் வழியாக கட்டுபடுத்துகிறது. அரசின் கட்டுபாட்டில் உள்ள தேசியத் தொலைக்காட்சிச் சேவை அமைப்பான வியட்நாம் தொலைக்காட்சி 9 அலைவரிசைகளை வட்டார ஒலி/ஒளி பரப்பு நிலையங்களோடு இணைந்து இயங்குகிறது. நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் வட்டார, நகராட்சி தொலைக்காட்சி நிலையங்களின் வலைப்பின்னல் வழியாகப் பரப்பப்படுகின்றன. வியட்நாம் சட்டம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை அணுக வரம்புகள் விதித்துள்ளது. என்றாலும் பல வீடுகள் அயல்நாட்டு நிகழ்ச்சிகளை வீட்டு செயற்கைக்கோள் கருவிகள் வாயிலாக அணுகுகின்றன.

ஒலி/ஒளி பரப்பு நிலையங்கள் ஆறும் 61 வட்டாரத் தொலைக்காட்சி நிலையங்களும் 2006 அளவில் இயங்குகின்றன.

இணையம்

வியட்நாம் இணையப் பயன்பாட்டில் உலக அளவி 16 ஆம் இடத்தை வகிக்கிறது. அருகில் உள்ள பிற தென்கிழக்காசிய நாடுகளோடு ஒப்பிடும்போது இந்நிலை மிகவும் அதிகமாகும்.[10]

வியட்நாமில் ஐந்து இணையச் சேவை அமைப்புகள் இயங்குகின்றன. அவையாவன:வியட்நாம் குழுமம், வியட்நாம் தரவு தொடர்புக் குழுமம், நிதி, தொழில்நுட்ப வளர்ச்சி கூட்டிணையம், சாய்கோன் அஞ்சல், தொலைத்தொடர்புக் கூட்டிணையம், வியட்டெல் குழுமம். பெரிய நகரங்களில் ஒலியிழை சேவை பரவலாக கிடைக்கிறது.

புள்ளியியல்

ஆண்டு பயனர்கள் தேச உரிமை (%) பன்னாட்டு பட்டையகலம் (Bit/s) தன்னாட்டு பட்டையகலம் (Bit/s)
2003 804,528 3.80 1,036
2006 4,059,392 17.67 7,000
2009 20,894,705 24.47 53,659 68,760
2012 31,200,000[11] 35.62 311,176 415,396

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. CIA World Fact Book
  2. Vietteltelecom.vn
  3. Mobifone.com.vn
  4. Vinaphone.com.vn
  5. Sfone.com.vn
  6. Vietnammobile.com.vn
  7. Beeline.vn
  8. http://vietnamnet.vn/vn/cong-nghe-thong-tin-vien-thong/81135/s-fone-da-gan-nhu-ngung-hoat-dong.html
  9. http://www.qdnd.vn/qdndsite/vi-vn/61/186301/print/Default.aspx
  10. CIA World Fact Book
  11. Maierbrugger, Arno (3 July 2013). "Internet usage in Vietnam takes off". Inside Investor. பார்த்த நாள் 24 July 2013.

வெளி இணைப்புகள்


தகவல் வாயில்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.