வினய் பாடக்

வினய் பாடக் ஒரு இந்திய நடிகரும் அரங்க உரிமையாளரும் ஆவார். புதிய வகை நடிகர்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ள ரன்வீர் ஷோரே, ரஜத் கபூர், அபே டியோல் ஆகியவர்களுடன் இந்தியத்திரையுலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். கோஸ்லா கா கோஸ்லா, பேஜா ஃப்ரை மற்றும் ஜானி கட்டார் போன்ற விமர்சகர்களால் பாராட்டப்பட்ட பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

Vinay Pathak
தொழில் Film actor, Television Presenter, Film producer

திரைப்பட வாழ்க்கை

வினய் ஸ்டோனி ப்ரூக்கில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்திற்குச் சென்று பல நாடகங்களில் நடித்தார். அவர் நண்பர்கள் அனைவரிடமும் தான் திரும்பச்சென்று போலிவுட் நடிகராகப்போவதாகக் கூறினார். கோஸ்லா கா கோஸ்லா எனும் சிரிக்கவைக்கும் படத்தில் அவரது நடிப்பைக் கண்ணுறுமுன்பே பாடக் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பின் குறுகிய காலத்தில், பேஜா ஃப்ரை எனும் நகைச்சுவைப் படத்தில் அவருடைய நட்சத்திர நடிப்புசார்ந்து பல்வகையான கருத்துக்கள் கூறப்பட்டு அந்த ஆண்டு அவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிஃபேர் விருதை பெற்றார். இறப்பதற்குமுன் பிரிந்துசெல்வதைச் சொல்லிச் செல்லும் ஒரு சாதாரண மனிதரைப்பற்றிய கதையைச் சொல்லும் தஸ்விதனியா எனும் திரைப்படத்தையும் அவர் தயாரித்தார்.

அவரது நண்பரும் இணைநடிகருமான ரன்வீர் ஷோரேவுடன் அவர் ரன்வீர் வினய் அவுர் கௌன்? படத்தின் வெற்றிக்குக் காரணமானார். ஸ்டார் டி.வி.யில்.[1] அப்படம் ஒளிபரப்பப்பட்டது. சேனல் Vல் ஒளிபரப்பப்பட்ட, சற்று பிரபலம் குன்றிய "ஹௌஸ் அரெஸ்ட்" படத்திலும் அவர்கள் இணைந்து தோன்றினர். 2006 ஆம் ஆண்டில் ESPN-STARல் "துனியா கோல் ஹெய்ன்" படத்தில் (ஆண்டி பாண்டர்ஸ் போன்றோருடன்) தோன்றி ஜெர்மெனியில் உலக கோப்பையை வென்றனர். அவரது நண்பர்கள் ரன்வீர், சிரேஷ் மேனன், கௌரவ் கேரா ஆகியோருடன் குழுவாக, வாய்ப்பூட்டு போடுதல்/ஏமாற்றுதல் அடிப்படையிலான ஷேகர் ஸுமனால் அளிக்கப்பட்ட சிறந்த இந்திய சிரிப்புப் படம்/நாடகத்தில் (படம்/நாடகம் ஸ்டார் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது) பங்கேற்றார். அவரது பிற்காலத்தில் தொலைக்காட்சியில் ரன்வீருடன் "கிரிக்கெட் க்ரேஸி"யை அளித்தார், அது இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கனடாவில் சீக்கியமதம் சார்ந்த ஒரு காதல்-கொலைக் கதையைப் பற்றிய வெளிச்சத்திற்குவந்த கொலை (மர்டர் அன்வெய்ல்ட்) (2005) என்ற தொலைக்காட்சிப் படத்தில் இன்ஸ்பெக்டர் குர்பால் பதஷ் எனும் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் பாடக் தோன்றியுள்ளார்.

விமர்சனரீதியாக பாராட்டு பெற்ற ஜானி கட்டர் மற்றும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்தும் வசூலில் பேரிழப்பை அளித்த படம் ஆஜா நச்லே ஆகியவற்றிலும் பாடக் நடித்தார். சுதிர் மிஷ்ரா எனும் புகழ்பெற்ற இயக்குனர் தயாரித்த கோயா கோயா சந்த் படத்தில் அவரது பணி பாராட்டப்பட்டது. சமீபத்தில் அதிக வசூலைத் தேடிக்கொடுத்த ராப் நே பனா தி ஜோடி எனும் போலிவுட் திரைப்படத்திலும் அவர் அபாரமாக நடித்தார்.

ப்ரிட்டிஷ் நேண்டி கம்யூனிகேஷன்ஸால்(PNC) தயரிக்கப்பட்ட அவரது முன்னணித் திரைப்படம் 'ராத் கயீ பாத் கயீ' சமீபத்தில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற எச்.பீ.ஓ. (HBO) அலைவரிசையின் நியூயார்க் சௌத் ஏஷியன் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. அத்திரைப்படம் இந்தியாவில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும், மேலும் அது வினய் பாடக் மற்றும் ராஜத் கபூர் ஆகியோரின் இரட்டிப்புத் திறனை மீளக்கொண்டுவரும்.

சுஷில் ராஜ்பல் இயக்கிய 'அந்தர்ட்வண்ட்' என்ற அவரது திரைப்படம் சமூக விவகாரங்களைப் பற்றிய சிறந்த திரைப்படம் என்பதற்காக 2009ஆம் ஆண்டுக்கான தேசிய விருதினைப் பெற்றது. திரைப்படத்தில் பாடக் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். ஹிப் ஹிப் ஹுர்ரே எனும் தொலைக்காட்சித்தொடரில் வின்னி ஐயா எனும் ஆங்கில ஆசிரியராகவும் நடித்துள்ளார்.

"கச்சா லிம்பு", "மும்பை கட்டிங்", "ஓ காட் நோ காட்", "டயர் பஞ்சர் அட்வென்சர்ஸ் ஆஃப் ஃபேண்டா கோலா" மற்றும் "SRK" திரைப்படங்கள், வெளிவரவிருக்கும் அவரது திரைப்படங்களில் அடங்கும்.

சொந்த வாழ்க்கை

இவர் பீஹாரிலிருந்து வந்த மற்றொரு நடிகர் ஆவார். அவருக்கு வசுதா, ஷாரினீ எனும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

திரைப்படத்துறை வாழ்க்கை

  • மை நேம் ஈஸ் கான் (2010) ஜிதேஷ்
  • க்விக் கன் முருகன் (2009) சித்ர குப்தா
  • ஸ்ட்ரெய்ட் (2009) திரு.பீனு படேல்
  • ஓ, மை காட் (2008) ராஜேந்த்ர துபே
  • தஸ்விதனியா (2008) அமர் கௌல்
  • ராப் நே பனா தி ஜோடி (2008) பல்விந்தர் "பாபி" கோஸ்லா
  • வயா டார்ஜிலிங் (2008) இன்ஸ்பெக்டர் ராபின் டட்
  • மைத்யா (2008)
  • ஜானி கட்டார் (2007)
  • ஆஜா நச்லே (2007) திரு.சோஜர்க்
  • பேஜா ஃப்ரை (2007) பாரத் பூஷண்
  • ஸே ஸலாம் இந்தியா (2007)
  • வாட்டர் (2007) ரபீந்த்ரா
  • கோயா கோயா சந்த் (2007) ஷய்மோல்
  • மனோரமா ஸிக்ஸ் ஃபீட் அண்டர் (2007)
  • கோஸ்லா கா கோஸ்லா (2006) அசிஃப் இக்பால்
  • மிக்ஸ்ட் டப்ல்ஸ் (2006) தோஷ்
  • மர்டர் அன்வெய்ல்ட் (2005) இன்ஸ்பெக்டர் குர்பல் பதஸ்
  • ஜிஸ்ம் (2003) DCP ஸித்தார்த்
  • ஹர் தில் ஜோ ப்யார் கரேகா (2000) மோண்டி
  • ஹம் தில் தே சூக் ஸனம் (1999) தருண்
  • ஃபைர் (1998) கைட் அட் தாஜ் மஹால்

தயாரிப்பாளராக

ஆண்டு திரைப்படம்
2008 தஸ்விதனியா

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

  • 2009:நியமிக்கப்பட்டது :ஃபில்ம்ஃபேர் பெஸ்ட் ஸப்போர்டிங் ஆக்டர் அவார்ட்-ராப் நே பனா தி ஜோடி

குறிப்புதவிகள்

  1. லாஃப் ரையத் , indiantelevision.com லிருந்து ஒரு கட்டுரை

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.