விண்வெளி மையம்
விண்வெளி மையம்
• விண்வெளியில் குறிப்பிட்ட காலம் தங்கி ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதாக மனிதனால் வடிவமைக்கப்பட்டது விண்வெளி நிலையமாகும். • புதிய விண்வெளி நிலையங்கள், விண்வெளியில் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் தங்கி ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டவை. அல்மேஜ், சல்யூட் வரிசை, ஸ்கைலேப், மிர் போன்றவை இவ்வகை விண்வெளி நிலையங்களாகும். • விண்வெளி நிலையங்கள், நெடுநாள் விண்வெளியில் தங்குவதால் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராயப்பயன்படுத்தப்படுகின்றன. மற்ற விண்கலங்களைப் போல் அல்லாமல் பல நாள் விண்வெளியில் தங்கி அதிக எண்ணிக்கையிலான ஆய்வுகள் மேற்கொள்ள இவை அடித்தளமாய் அமைகின்றன. இராணுவம் பயன்படுத்திய கடைசி விண்வெளி நிலையம் சல்யூட் 5 ஆகும். இது 1976 மற்றும் 1977 ஆம் ஆண்டில் சோவியத் குடியரசின் அல்மேஜ் திட்டத்தின்படி பயன்படுத்தப்பட்டது.
விண்வெளி நிலையங்கள் பொதுவாக இருவகைப்படும். சல்யூட் ஸ்கைலேப் ஆகியவை ஒற்றை அடுக்கு வகையாகும். இவை முதலில் ஏவப்பட்டு பின் விண்வெளி ஆய்வாளரால் வழிநடத்தப்படும். தேவையான பொருள்கள் மற்றும் ஆய்வுக் கருவிகளுடன் ஏவப்படும். அவை பயன்படுத்தப்பட்டவுடன் விண்கலம் கைவிடப்படும். சல்யூட் , மற்றும் சல்யூட் 7 ஆகியவை சில மாற்றங்களை உள்ளடக்கி இரு அடுக்கு முறையில் உருவாக்கப்பட்டன. இது, இரண்டாவது விண்வெளி ஆய்வாரள் புதிய விண்கலம் மூலம் அதனைச் சென்றடைவதற்கும் பொருள்களைக் கொண்டு சேர்க்கவும் வழிவகுத்தது. இதனால், விண்வெளி நிலையம் ஆய்வாளரால் தொடர்ந்து வழிநடத்தப்பட்டது. ஸ்கைலேப் இரட்டை அடுக்கு வகையைச் சார்ந்தது.. இரண்டாம் அடுக்கு பயன்படுத்தப்படவில்லை. இரண்டாம் அடுக்கு பல கால ஆய்வுக்கும் வழிவகுக்கும். இரண்டாம் வகையைச் சார்ந்த மிர், மற்றும் பன்னாட்டு விண்வெளி நிலையம் (ஐவெநசயெவழையெட ளுpயஉந ளுவயவழைn-ஐளுளு) ஆகியவை தனியாக முதலில் ஏவப்பட்டு, தேவையான பகுதிகள் படிப்படியாக அதனுடன் இணைக்கப்பட்டன. இவ்வகை விண்வெளி நிலையங்களை ஏவுவதற்கு மிகவும் திறன் வாய்ந்த ஒற்றை ஏவுவாகனம் தேவையில்லை. உணவு மற்றும் கருவிகளைத் துணைக்கலன்கள் மூலம் தேவையானபோது பெறுவதற்கேற்ப விண்வெளி நிலையம் வடிவமைக்கப்படும். எனவே, நீண்ட கால ஆய்வுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகக் குறைந்த மறுசுழற்சிவீதம், அதிக கதிர்வீச்சு, குறைந்த ஈர்ப்பு விசை ஆகியவை இவற்றில் தங்கும் காலத்தைக் குறைப்பனவாகும். இவை நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், நெடுநாள் உடல் நலபாதிப்பைத் தருவதாகவும் உள்ளது. எதிர்காலத்தில் இக்குறை நீக்கப்பட்டு பலநாள் விண்வெளிக் கலத்தில் தங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சில விண்வெளி நிலையங்கள், விண்வெளி நகரம் என்னும் அளவிற்கு அதிக மனிதர்களை உள்ளடக்கும் வகையிலும் அவர்கள் தங்கள் உறைவிடங்களை அமைத்துக் கொள்ளும் வகையிலும் ஏவப்படலாம். இதுவரை இவ்வகையான எந்த விண்வெளி நிலையமும் உருவாக்கப்படவில்லை. மேலும், ஏவுவதற்கான தற்காலப் பொருட்செலவு நடைமுறைக்கு சாத்தியமானதல்ல. • டியாங்காங்-ஐ என்னும் விண்வெளி நிலையத்தை 2011-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனா ஏவியது. அதன்பின் உலகில் விண்வெளி நிலையத்தை ஏவிய நாடுகளில் மூன்றாவதாக சீனா உள்ளது