விண்மீன் தொகுதி உருவம்

விண்மீன் தொகுதி உருவம் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய தமிழ்ப்பாடல் ஒன்று உள்ளது. அதனை இங்குள்ள ஆவணப் பதிவில் காணலாம். இவற்றைப் பற்றிய விளக்கங்களைத் தரும் தொடுப்புகள் இங்குத் தரப்படுகின்றன.

விண்மீன்களைத் தமிழர் 12 ஓரைகளாகவும் [1] நாளைக் குறிக்கும் 27 மீன்களாகவும் கண்டு கணித்துவந்தனர். வாரத்தின் ஏழு நாளும் ஏழு கோள்கள் [2] ராகு, கேது ஆகியவை பஞ்சாங்கக் கணக்கில் நிழல்-கோள்கள்.

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |
| | | | க்ஷ | ஸ்ரீ | #

  1. அசுவினி - இது ஒரு நாள்-மீன். ஆறு மீன்களைக் கொண்ட தொகுதி [3] - குதிரைத் தலை போல இருக்கும்.[4][5] இரலை, ஏறு, புரவி, யாழ், ஐப்பசி என்னும் பெயராலும் இதனைக் குறிப்பிடுவர். இப் பெயர் கொண்ட நாளை மருத்துவ-நாள் என்றும், தலை-நாள் என்றும் குறிப்பிடுவர். (திவாகர நிகண்டு)

  1. பரணி - இது ஒரு நாள்-மீன். நான்கு கால் நட்டுப் பரண் என்னும் பரணி அமைக்கப்பட்டது போல இருக்கும்.[6][7] அடுப்பு, பூதம், தாழி, பெருஞ்சோறு, போதம், நாடுகிழவோன் என்னும் பெயர்கள் இதற்கு உண்டு. இந்த நாளைத் தருமன் நாள் என்பர். (திவாகர நிகண்டு)

  1. மேழம் என்பது 12 ஓரைமீன் தொகுதிகளில் ஒன்று. இது ஆட்டுத்தலை போல் உருவம் கொண்டிருக்ககும்.[8] இதனை ஆடு என்றும் குறிப்பிடுவர். மேழ மாதத்தைச் சித்திரை மாதம் என்கிறோம். வருடை, புதன், தகர், மறி, மை, கொறி என்னும் பெயர்கள் இதற்கு உண்டு எனச் சேந்தன் திவாகரம் குறிப்பிடுகிறது.

  1. விடை என்பது 12 ஓரைமீன் தொகுதிகளில் ஒன்று.

அடிக்குறிப்பு

  1. இராசி
  2. சூரியன் மட்டும் நாம் இருக்கும் விண்மீன்
  3. படம்
  4. Ashvini
  5. Aries
  6. பரணி
  7. நான்கு கால் நட்டு அமைக்கப்பட்ட பரணி
  8. மேழ-ஆடு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.