விண்மீன் ஆண்டு

விண்மீன் ஆண்டு என்பது விண்ணில் நிலைத்திருக்கும் விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு பூமி சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவு ஆகும். மாறாக ஓர் குறிப்பிட்ட விண்மீன்களின் அமைப்பிற்கு சூரியன் தனது நீள்வட்ட பாதையில் மீண்டும் வரும் கால அளவுமாகும். இது பகல் 12:00 1 சனவரி 2000 (J2000.0)அன்று 365.256363004 நாட்கள்[1] . இது J2000.0 இன் சராசரி காலநிலை ஆண்டை விட .[1] 20m24.5128s நீளமானது. ஆங்கிலத்தில் இதனை "sidereal year" எனக் குறிப்பர். ( sidus இலத்தீனத்தில் "விண்மீன்").

மேற்கோள்கள்

  1. IERS EOP PC Useful constants ஒவ்வொரு நாளும் 86400 SI வினாடிகள் கொண்டன.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.