விண்டோசு 7

விண்டோசு 7 (Windows 7) எனப்படுவது விஸ்டாவிற்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட புதிய இயக்கு தளம் ஆகும். இது இதற்கு முன்பாக பிளாக்கோம்பு (Blackcomb) எனவும் வியன்னா (Vienna) எனவும் இது குறிப்பிடப்பட்டது. இது அக்டோபர் 22, 2009 அன்று மக்களின் பாவனைக்கு வந்தது.

விண்டோசு 7
Windows 7
விண்டோசு 7 திரைக்காட்சி மைல்கல் 1 பில்ட் 6519
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
குடும்பம்மைக்ரோசாப்ட் விண்டோசு
மூலநிரல்மூடிய நிரல்
உற்பத்தி வெளியீடுH2 2009-2010 (எதிர்பார்ப்பு)
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
மைல்கல் 1 (6.1.6574.1) / ஏப்ரல் 20 2008[1]
கருனி வகைHybrid Kernel
அனுமதிமைக்ரோசாப்ட் EULA

வரலாறு

விண்டோசு 7 இன் வரலாற்றுப் பாதையில் பல்வேறு மைல்கல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மைல்கல் 1

மைல்கல் 1 இல், விண்டோசின் மின்வின் கருனி (kernel, கெர்னெல்) கொண்டு உருவாக்க பட்ட விஸ்டா ஆகும். வெளிப்படையாக எந்த ஒரு வேறுபாடும் தெரியவிட்டாலும், மின்வின்கருனி கொண்டு உருவாக்கபட்டதால் மிகவும் எளிய பொருத்துமைகள் கொண்டதாக ("modular" ஆக) இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

வெளிவர இருக்கும் நாள்

2010 இல் வெளிவரும் என்று எதிர்பார்க்க பட்டாலும் பில் கேட்ஸ் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என தெரிவித்தார். எனினும் அவர் திருந்திய வடிவத்தைப் பற்றி (beta version ஐ பற்றி) கூறுகிறார் என மைக்ரோசாப்ட் கூறியது.

சிறப்புகள்

மின்வின்

மின்வின் எனப்படும் கருனி (கெர்னல்) கொண்டு உருவாக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மைல்கல் ஒன்றில் பார்த்ததால் இப்படி கூறுகிறார்கள்.

உள்ளீடு

ஐஃபோன் போன்று தொடுவிசை (டச்) வசதி கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுணர் திறனும் (Speech Recognition) கையெழுத்துணர் திறனும் போன்று நிறைய செய்ய இருப்பதாக மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் கூறி இருக்கிறார்.

மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ

ஊடகங்கள்

  1. http://news.softpedia.com/news/Leaked-Details-of-Windows-7-M1-March-2008-Edition-Version-6-1-Build-6574-1-83964.shtml
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.