விட்டஸ் பெரிங்

விட்டஸ் ஜோனசன் பெரிங் (Vitus Jonassen Bering) ரஷிய கடற்படை அதிகாரி மற்றும் புதுநில ஏகுநர் ஆவார். மேலும் இவர் இவான் இவனோவிச் பெரிங் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறந்ததினம் தெளிவாகத் தெரியவில்லை எனினும் 1681 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் டென்மார்க் நாட்டின் ஹார்சென்ஸ் நகரில் அவருக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது. வடஅமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையில் மற்றும் `ஆசிய கண்டத்தின் வட கிழக்கு கடலோர பகுதியில் அவர் மேற்கொண்ட இரண்டு பயணங்களுக்காக அறியப்படுகிறார். முக்கியமாக அவர் அமெரிக்காவுக்கவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே தெளிவான நீர்பரப்பு இருப்பதை நிரூபித்தார். 1741 ஆம் ஆண்டில் டிசம்பர் 8 ஆம் தேதி ரஷ்யாவின் பெரிங் தீவில் (அவர் நினைவாக பெயரிடப்பட்டது) தனது குழுவினர் 28 பேருடன் ஸ்கர்வி நோய் தாக்கி இறந்தார். பெரிங் நீரிணை, பெரிங் கடல், பெரிங் தீவு, பெரிங் பனிப்பாறை மற்றும் பெரிங் நில பாலம் ஆகிய அனைத்துக்கும் அவரது நினைவாக அவர் இறப்பிற்குப் பிறகு பெயரிடப்பட்டது.

விட்டஸ் ஜோனசன் பெரிங்
பிறப்புஆகஸ்ட் 5, 1681 (ஞானஸ்தானம் செய்யப்பட்ட நாள்)
ஹார்சென்ஸ், டென்மார்க்
இறப்பு8 திசம்பர் 1741(1741-12-08) (வயது 60)
பெரிங் தீவு,ரஷ்யா
அறியப்படுவதுபுதுநில ஏகுநர்
வாழ்க்கைத்
துணை
அன்னா பெரிங்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.