விஜயபாகு படுகொலை

விசயபாகு படுகொலை அல்லது விஜயபா கொள்ளய என்பது, இலங்கையில் 1521 இல் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வாகும். கோட்டை அரசின் மன்னன் ஏழாவது விசயபாகுவின் பிள்ளைகள் மூவரும் தந்தைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றித் தமக்குள் பகிர்ந்துகொண்ட நிகழ்வையே “விசயபாகு படுகொலை சுட்டுகிறது.

கோட்டைய அரசு

ஏழாவது விசயபாகு மன்னனின் முதல் திருமணத்தின் மூலம் மூன்று பிள்ளைகள் கிடைத்தனர். அவர்கள் முறையே, புவனேகபாகு, பரராசசிங்கன், மாயாதுன்னை ஆகியோர். மன்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதும் அவர் மனைவி கிரிவெல்லவுக்கு தேவராசா எனும் பிள்ளை கிடைத்தது. கிரிவெல்லவின் ஆலோசனைப் படி அவள் மகன் தேவராசாவை முடிக்குரிய இளவரசனாக்க அரசன் தீர்மானித்தான். இதனைத் தெரிந்துகொண்ட முதல் மனைவியின் பிள்ளைகள் மூவரும் அரசனுக்கு எதிராகச் செயற்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒருவனை அரச மாளிகைக்கு அனுப்பி, மன்னனை மாளிகையிலேயே கொலை செய்வித்தனர். இந்த வரலாற்று நிகழ்வே விசயபா படுகொலை என அழைக்கப்படுகிறது.

1521 இல் ஏற்பட்ட இந்த விசயபாகு படுகொலையின் பெறுபேறாய்க் கோட்டை அரசு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இளைய மகன் மாயாதுன்னவே இந்நிகழ்வின் முதன்மையானவனாகச் செயற்பட்டான். கோட்டை அரசின் மன்னனாக வேண்டும் என இவனே அதிகம் கனவு கண்டான். இவனில் சந்தேகம் கொண்ட அண்ணன் புவனேகபாகு, மாயாதுன்னையைக் கொலை செய்யப் போர்த்துக்கேயரின் உதவியை நாடினான். இதனாலும் மேலும் குழப்பங்கள் வெடிக்கலாயின. போர்த்துக்கேயரும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த இந்நிகழ்வு மூல காரணியாக அமைந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.