விக்கியா

விக்கியா என்பது எவரும் ஒரு விக்கியைத் துவங்க வகைசெய்யும் இணையதளம் ஆகும். இது 2004 ஆம் ஆண்டு ஜிம்மி வேல்சு மற்றும் ஆஞ்செலா பீஸ்லி ஆகியோரால் துவங்கப்பட்டது. முதலில் விக்கிசிட்டீஸ் என்று அழைக்கப்பட்ட இது 27.03.06 அன்று விக்கியா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

விக்கியா
உரலிhttp://www.wikia.com
தளத்தின் வகைwiki
உரிமையாளர்ஜிம்மி வேல்சு
உருவாக்கியவர்ஜிம்மி வேல்சு மற்றும் ஆஞ்செலா பீஸ்லி
தற்போதைய நிலைநல்ல இயக்கத்தில் உள்ளது

விக்கியாவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் க்னூ வகை பதிப்புரிமை அல்லது கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள் கொண்டவை ஆகும். எனவே யாரும் ஒரு விக்கியைத் தொகுக்கலாம். ஒரு விக்கியை யாரும் சொந்தம் கொண்டாடவோ தானே அதன் தலைவர் என்றோ சொல்ல முடியாது.

மீடியாவிக்கி மென்பொருளைப் பயன்படுத்தியே விக்கியா தளம் இயங்குகிறது.

விக்கியா தளம் தனக்குத் தேவையான பணத்தை விளம்பரங்கள் மூலம் பெறுகிறது. விக்கிப்பீடியாவோ தனக்குத் தேவையான பணத்தை நன்கொடைகள் மூலம் மட்டுமே பெறுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.