விக்கிமேப்பியா
விக்கிமேப்பியா (WikiMapia) ஒரு இணையதள வரைபடம் மற்றும் துணைக்கோள் படிம வளம். இது கூகுள் மேப்ஸ்களை விக்கி அமைப்புடன் இணைக்கிறது, பயனாளர்கள் தகவல்களை பூமியின் எந்த இடத்திலும் குறிப்பு வடிவத்தில் சேர்க்க அனுமதிக்கிறது.[1]. இது அலெக்சாண்டர் கொரியாகினே மற்றும் எவ்கேனி சவேலியெவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது, மற்றும் முழு உலகத்தை விளக்கும் நோக்கத்துடன் மே 24 2006 இல் தொடங்கப்பட்டது. இதில் இப்பொழுது ஒன்பது மில்லியனுக்கும் மேல் இடங்கள் குறிக்கப்பட்டிருக்கிறது[2]. பதிவு செய்யும் பொழுது விக்கிமேப்பியாவில் தொகுக்கவோ அல்லது சேர்க்கவோ தேவையில்லை, உலகை சுற்றி இரண்டு லட்சத்திற்கும் மேலான பயனாளர்கள் தற்பொழுது இதில் பதிவு செய்துள்ளனர்[3].
![]() பயர்பாக்ஸ் உலாவியில் முழுத்திரையில் விக்கிமேப்பியா | |
உரலி | www.wikimapia.org |
---|---|
மகுட வாசகம் | முழு உலகத்தையும் விளக்குவோம்! |
வணிக நோக்கம் | உண்டு |
தளத்தின் வகை | கூட்டிணைந்து படமாக்கல் |
பதிவு செய்தல் | ஆம் (கட்டாயமானதல்ல) |
கிடைக்கும் மொழி(கள்) | தமிழ் உட்பட 93 மொழிகள் |
உருவாக்கியவர் | அலெக்சாட்ரே கொரியாக்கின், எவ்கேனி சவேலியெவ் |
வெளியீடு | மே 24, 2006 |
வருமானம் | ஆட்சென்ஸ் விளம்பரம் ஊடாக |
தற்போதைய நிலை | Active |
அம்சங்கள்
ஒரு இடத்தை இணைக்க
விக்கிமேப்பியா எந்த ஒரு உதவியாளரையும் "இணைப்பை" (இடக்குறி) எந்த இடத்திலும் சேர்க்க இவ்விடத்தைச் சுற்றி ஒரு பல்கோணியை (polygon) குறியிட்டு அதன் பிறகு ஒரு கோட நிலை மொழி, தலைப்பு, விவரிப்பு மற்றும் பல வகைகளை வழங்க அனுமதிக்கிறது[4]. ஒரு விருப்ப குறிப்பு வழங்கப்படலாம், அத்துடன் படிமங்கள் மற்றும் யூட்யூப்பில் பதித்த நிகழ்படங்கள், இவை அனைத்தும் இடத்துக்கான தகவல் விண்டோசில் தோன்றுகின்றன[5].
நீங்கள் கணிபொறி சுட்டியை ஒரு பிரிவின் மீது அசைக்கும் பொழுது காட்டப்படும் சேர்க்கை பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் இடக்குறியில் பல வகைகளை சேர்க்கலாம். (ஒரு வகையினோடு காட்டப்படும் எண்கள் அந்த வகைக்கான இடக்குறி எண்களை குறிக்கும். ஒரு இடகுறிக்காக விக்கிபீடியா பக்கம் இருக்கிறதென்றால், நீங்கள் அந்த பக்கத்திற்கும் இணைப்பு போடலாம்.
விக்கிபீடியாவை போல, விக்கிமேப்பியாவின் எல்லா பயனாளர் உள்ளடக்கங்களின் உரிமை விக்கிமேப்யாவிற்கு தனித்து வழங்கப்பட்டுள்ளது. விக்கிமேப்யா ஜிஎப்டிஎல் (GFDL) உரிமத்தை உபயோகிக்கவில்லை, எனவே ஆதாய உரிமைகள் மற்றும் பல உபயோக உரிமைகளும் விக்கிமேப்யாவில் சமர்ப்பிக்கும் போது இழக்கப்படுகிறது[6]. தளத்தின் சேவை வார்த்தைகளின் படி, பயனாளர் சமர்ப்பணங்கள் சொந்த அல்லது வர்த்தகம் அல்லாத பாட குறிக்கோளுக்காக இணையதளம் மூலம் கிடைக்கிறது[7].
உலகின் ஒரு சில பகுதிகளில் காலவாதியாகிவிட்ட அல்லது அதிக விலைமிக்க வரைபடம், அதாவது இந்தியா, போன்ற இடங்களில் விக்கிமேப்யாவின் வளர்ச்சி ஆச்சர்யத்திற்குரிய வேகத்தில் இருக்கிறது. இவ்வேகமான வளர்ச்சி அதற்கான பிரச்சனைகளை கொண்டு வந்தது, இருந்தாலும். நகரப்புறங்கள் ஆயிரக்கணக்கான ஒன்றுக்குமேல் ஒன்றாக செவ்வகங்கள் சூழ்ந்திருக்கிறது தனி வீடுகள் அமைப்பு குறிக்கப்பட்டுள்ளது, ஆனால் விக்கிமேப்யா இன்டர்பேஸ் பொது மக்களின் ஆர்வமுள்ள இடங்களில் இருக்கும் வீடுகளை பிரித்துகாட்ட வழியில்லை. சமீபத்தில், பிரிவு உலாவி அறிமுகபடுத்தப்பட்டிருக்கிறது, இது பயனாளர்கள் எந்த பிரிவு அல்லது பிரிவுகளுக்கான அம்சங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அனுமதிக்கிறது.
படங்கள்
நீங்களும் இந்த இடத்தில் படங்களை சேர்க்கலாம். உதாரணமாக, நீங்கள் ஷேபீல்ட்டில் (Sheffield) உள்ள டின்ச்லே கூலிங் டவர்ஸ் (Tinsley Cooling Towers) விரிவாக்கத்தை செய்கிறீர்கள் என்றால், இடத்தின் விளக்கத்தின் மூலை பகுதியில் உள்ள பட்டியலை க்ளிக் செய்வீர்கள். பிறகு அட் / மானேஜ் படங்கள் க்ளிக் செய்து நீங்கள் படத்தை சேர்க்கலாம்.
மொழிகள்
இது முழுவதும் பன்மொழி இடகுறிகள். தற்பொழுது மொத்தம் 93 மொழிகள் ஆதரவு தரப்பட்டுள்ளது, மற்றும் நூறு சதவிகித இன்டர்பேஸ் 56 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. பதிவுப்பெற்ற பயனாளர்கள் விக்கிமேப்யாவின் இன்டர்பேஸ் ஒரு சிறப்பு பக்கத்தில் மொழிப்பெயர்க்க உதவி செய்யலாம்.(http://wikimapia.org/translate/).
பயனாளர் கணக்குகளும் அளவுகளும்
விருப்ப பணியாளர் கணக்குகள் அக்டோபர், 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டது[8]. பதிவுப்பெற்ற பயனாளர்கள் சொந்த செய்திகளை ஒருவருக்கொருவர் அனுப்பலாம் மற்றும் அக்டோபர் 2007 இல் தொடங்கப்பட்ட பொது மன்றத்தையும் உபயோகிக்கலாம்[9]. விக்கிமேப்யா தனது பதிவுப்பெற்ற பயனாளர்களை வரைபடங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க கண்காணிப்பு பட்டியலை அமைக்க அனுமதிக்கிறது. இந்த வசதிக்காக நீங்கள் Wikimapia->Profile->Watchlist சென்று அதன் பிறகு சரியான அளவு இடத்தில வாட்ச்லிஸ்டை சேர்க்கலாம்.
விக்கிமேப்யா FAQ வில் மூன்று பயனாளர் நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. பயனாளர்கள் தனக்கு சாதகமாக அல்லது மற்ற பயனாளர்கள் பங்களிப்புகளுக்கு எதிராக வாக்களிக்கலாம், இது பயனாளர்களின் அந்தஸ்த்து சமூகத்தில் உயர அனுமதிக்கிறது. இங்கே பயனாளர்கள் ஸ்டாட்ஸ் மற்றும் தரப்பலகை உள்ளது, இது தானகவே பயனாளர்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு தரம் படுத்துகிறது.
விக்கிமேப்யா பீட்டா
அக்டோபர் 2008 இல் பதிவுப்பெற்ற பயனாளர்களின் சோதனைக்காக பீட்டா பதிப்பு தொடர்புக்கு வைக்கப்பட்டது. புதிய இன்டர்பேஸ், புதிய சிறப்பம்சங்களை சேர்த்திருக்கிறது அதாவது "டெர்ரேய்ன் பாச்சஸ்' (terrain patches) மற்றும் ஒரு புதிய படை "விக்கிமேப்யா மேப் ". விக்கிமேப்யா வரைபடம் விக்கிமேப்யா பயனாளர்களால் தயாரிக்கப்பட்ட தகவல்களை மட்டும் காட்டுகிறது, அதாவது பல்கோணிகள் மற்றும் சாலைகள் - ஒவ்வொரு இடக்குறியின் பிரிவை பொருத்து பல்கோணிகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும், உதாரணமாக ஏரி அல்லது அணைக்கு நீலம் அல்லது பூங்காவிற்கு பச்சை. பிரிவாக காட்டப்பட்டிருக்கும் இடங்களை எல்லாம் நீங்கள் வடிக்கட்டலாம். விக்கிமேப்யா விக்கி ஆவணம் செய்வதற்காகவும் மற்றும் கூட்டமைப்பிற்கு உதவுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது.
வியாபார மாதிரி
கூகுள் விளம்பரங்கள் மூலம் இந்த தளம் வருமானம் உண்டாக்குகிறது. ஜூலை 2007 இல், விக்கிமேப்யாவை நிறுவியவர்கள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முதலீட்டாளர்களை தேட ஆரம்பிக்க முடிவு செய்தனர்[10].
தகவல்களை மாற்றி உபயோகிக்கக்கூடிய
ஒரு ஜிபிஎஸ் (GPS பெறுநர் ப்லக்-இன் திட்டம் உபயோகித்து விக்கிமேப்யாவில் இணைக்கப்படலாம் (பீட்டா, விக்கிமேப்யா தளத்திலிருந்து விண்டோஸ் ஒ எஸ்க்கு (Windows OS) இறக்கலாம்().
வரையறுக்கப்பட்ட விக்கிமேப்யாவின் செயல்கள் கிடைக்குமிடம்:
- கூகுள் எர்த் உபயோகிக்கின்ற கெஎம்எல் பைலின் (KML file) கூகுள் எர்த்தின் சக்திவாய்ந்த படை.
- கூகுள் மேப்ஸ் (Google Maps) மேபலேட்டுகளுடன் உபயோகிக்கும் (http://maps.google.com/ig/directory?synd=mpl&pid=mpl&features=sharedmap,geofeed&backlink=http%3A%2F%2Fmaps.google.com%2Fmaps%2Fmm%3Fmapprev%3D1%26ie%3DUTF8%26ll%3D21.779905,-72.685547%26spn%3D55.41436,82.265625%26t%3Dk%26z%3D4%26om%3D1&num=24&url=http://wikimapia.org/wm_mapplet.xml சிறப்பு படை)
- வரைபட சட்டத்திற்கான குறி மேல் உள்ள பட்டியலில் "விக்கிமேப்யா: உங்கள் பக்கத்தில் உள்ள வரைபடம்" இதற்கு கீழ் எந்த எச்டிஎம்எல் (HTML)இணைய பக்கத்திலும் காணப்படும்.
- அநேக ஜாவா - இயக்கப்பட்ட மொபைல் ஜீமேப்ஸ் (Mobile GMaps) போன்ற சம்மந்தமில்லாத மென்பொருள் உபயோகிக்கும் கை பேசிகள்.
இவற்றையும் பார்க்க
- விக்கீஸ் பட்டியல்கள் (List of wikis)
- கூகுள் எர்த் (Google Earth)
- கூட்டு முகப்பு (Collaborative mapping)
- பங்கெடுத்துக் கொள்ளக்கூடிய ஜிஐஎஸ் (Participatory GIS)
- ஜிஐஎஸ் பொது பங்களிப்பு (Public Participation GIS)
- ஓபன்ஸ்ட்ரீட் வரைபடம் (OpenStreetMap)
- ப்ளேசோபீடியா (Placeopedia)
வெளிபுற இணைப்புகள்
மேற்கோள்கள்
- Getting a bird's-eye view of any place on Earth
- Wikimapia Main Page (மேலே இட மூலையை பார்க்க)
- Banning users for vandalism
- Place types, etc
- How To #5: YouTube in Wikimapia!
- http://wikimapia.org/terms_reference.html
- Wikimapia Terms of Service
- Registration started
- WikiMapia FAQ
- விக்கிமேப்யா வலைப்பதிவு இட நுழைவு