வி. கே. கோகாக்

விநாயக கிருஷ்ண கோகாக் (ஆங்கிலம்: Vinayaka Krishna Gokak) (பிறப்பு:1909 - இறப்பு:1992) என்பவர் ஒரு கன்னட இலக்கியப் படைப்பாளி ஆவார். இவர் கன்டத்தில் எழுதி 1982-ல் வெளிவந்த 'பாரத சிந்து ராஷ்மி' என்ற காவியத்துக்காக 1990இல் ஞானபீட விருது பெற்றவராவார்.[1] இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளார். சத்ய சாய் பாபாவின் தீவிர பக்தர்.

வி. கே. கோகாக்
தொழில் பேராசிரியர், எழுத்தாளர்
நாடு இந்தியா
இலக்கிய வகை கதை
இயக்கம் நவோதையா
கையொப்பம்

கல்வி

இவர் தார்வார் கர்நாடக கல்லூரியில் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று முதல் வகுப்பில் தேறினார். 1938இல் நாடு திரும்பியதும், சாங்லி விலிங்டன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.

காவியம்

  • பாரத சிந்து ராஷ்மி

புதினங்கள்

  • சமரசவ ஜீவனா பகுதி1
  • சமரசவ ஜீவனா பகுதி2

கவிதைத் தொகுப்பு

  • உர்னானப்பா
  • அப்யுதயா
  • பாலதெகிலதல்லி
  • தையவா பிருத்வி (கன்னட சாகித்ய அகடாமி விருது)
  • சமுத்ர கீதகளு
  • இங்கிலீஷ் வோர்ல்ட்

பிற

  • சத்ய விமர்ஷய கெலவு தத்வகளு
  • நன்ன ஜீவன திருஷ்டி
  • ஜீவன பாட்டகளு
  • கலா சித்தாந்தா
  • இந்தியா & ஓர்ல்ட் கல்சர்
  • கோகாக் க்ருதி சிந்தனா

மொழி பெயர்ப்புகள்

  • இந்தி இலக்கியப் படைப்பாளி ராமதாரி சின்ஹ தினகரின் கவிதைகளை 'வாய்சஸ் ஆஃப் ஹிமாலயா' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.

மேற்கோள்

  1. "Jnanpith Award". Ekavi. பார்த்த நாள் 2006-10-31.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.