வாழ்வுரிமை
வாழ்வுரிமை அல்லது வாழ்வதற்கான உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உரித்தான ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். குறிப்பாக பிற மனிதர்களால் கொல்லப்படாமல் இருப்பது வாழும் உரிமை ஆகும். வாழும் உரிமையே இனப்படுகொலை, சட்டத்துக்குப்புறம்பான படுகொலைகள், தன்னிச்சையான படுகொலைகளை குற்றச்செயல்களாக ஆக்குகிறது. இந்த உரிமை கருக்கலைப்பு, கருணைக் கொலை, மரண தண்டனை, தற்காப்புப் போர் ஆகிய விவாதங்களில் முதன்மை பெறுகிறது. வாழும் உரிமை மிக முக்கியமானதாக இருந்தாலும் எல்லா நாடுகளும் சட்டங்களுக்கும் முறைமைகளுக்கும் கட்டுப்பட்டு அரசுகள் மனிதர்களைக் கொல்ல முடியும்.
அனைத்துலக சட்டங்கள், உடன்படிக்கைகள், வெளிப்பாடுகள்
- "அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு உரிது". ("Everyone has the right to life, liberty and security of person." உலக மனித உரிமைகள் சாற்றுரை
- "ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பான வாழ்வதற்கான உரிமை உண்டு. இந்த உரிமை சட்டத்தால் பாதுகக்கப்பட வேண்டும். யாரும் தன்னிச்சையாக அவரின் உயிரை இழத்தல் ஆகாது." ("Every human being has the inherent right to life. This right shall be protected by law. No one shall be arbitrarily deprived of his life.") - குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.