வால்ட் டிஸ்னி நிறுவனம்

வால்ட் டிஸ்னி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய[3], அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது.

வால்ட் டிஸ்னி நிறுவனம்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
முந்தியதுலாஃப்-ஓ-கிராம் ஸ்டுடியோ (1921–1923)
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்பாப் இகெர் (தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்)
கிறிஸ்டின் மெக்கார்த்தி (தலைமை நிதி அதிகாரி)
தொழில்துறை
உற்பத்திகள்தொலைக்காட்சி
வெளியீட்டு
திரைப்படங்கள்
இசை
வீடியோ விளையாட்டுகள்
பொழுதுபோக்கு பூங்காக்கள்
ஒளிபரப்பு
வானொலி
வலை இணையதளங்கள்
சேவைகள்உரிமம் வழங்குதல்
வருமானம் ஐஅ$59.434 பில்லியன்
இயக்க வருமானம் ஐஅ$15.706 பில்லியன்
நிகர வருமானம் ஐஅ$12.598 பில்லியன்
மொத்தச் சொத்துகள் ஐஅ$98.598 பில்லியன்
மொத்த பங்குத்தொகை ஐஅ$52.832 பில்லியன்
பணியாளர்201,000
பிரிவுகள்
  • வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
  • டிஸ்னி மீடியா நெட்வொர்க்ஸ்
  • டிஸ்னி பூங்காக்கள், அனுபவங்கள் மற்றும் தயாரிப்புகள்
  • வால்ட் டிஸ்னி நேரடி-க்கு-நுகர்வோர் & சர்வதேசம்
துணை நிறுவனங்கள்
[1][2]

டிஸ்னி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வால்ட் டிஸ்னி மற்றும் ரோய் ஓ டிஸ்னி ஆகியோரால் டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோவாக நிறுவப்பட்டது. இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி புரொடக்சன்ஸ் ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வால்ட் டிஸ்னி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ், பிக்ஸர், மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, லூகஸ்பிலிம், 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ், ஃபாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ் மற்றும் ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ் போன்றவை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரிவில் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.