வார்த்தை வாசல் (நூல்)

வார்த்தை வாசல் என்ற நூலை உவமைக்கவிஞர் சுரதா எழுதினார்.

வார்த்தை வாசல்
நூலாசிரியர்சுரதா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியிடப்பட்ட திகதி
1984
பக்கங்கள்80

தோற்றமும் தன்மையும்

பல நூல்களுக்கு சுரதா அவர்கள் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே, இந்நூலாகும். இந்நூலில் உள்ளவை புதுப்பாடல்(புதுக்கவிதை) வடிவிலும், மரபுப்பாடல்(மரபுக்கவிதை) வடிவிலும் உள்ளன.

பொருளடக்கம்

இனிக்கும் நினைவுகள்

பேராசிரியர் எழில் முதல்வன் அவர்கள் எழுதிய 'இனிக்கும் நினைவுகள்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

மணிப்புறா

மார, தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய 'மணிப்புறா' என்னும் நாவலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

திருமதி சிற்றம்பலம்

பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய 'திருமதி சிற்றம்பலம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

ரம்போலா கவிதைகள்

பேராசிரியர் ரம்போலா மாஸ்கரானஸ் அவர்கள் எழுதிய 'ரம்போலா கவிதைகள்' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

தமிழே என் உயிர்

கவிஞர் மூவேந்தன் அவர்கள் எழுதிய 'தமிழே என் உயிர்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

இருதய வியாதிகளும் சிகிச்சையும்

டாக்டர் எச்.செல்வராஜ் அவர்கள் எழுதிய 'இருதய வியாதிகளும் சிகிச்சையும்' என்னும் மருத்துவ நூலுக்கு 1968இல் வழங்கிய அணிந்துரை.

பாட்டுத் தோட்டம்

பூவண்ணன் அவர்கள் எழுதிய 'பாட்டுத் தோட்டம்' என்னும் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு நூலுக்கு 1970இல் வழங்கிய அணிந்துரை.

கட்டில் வீணை

கவிஞர் புதுமைவாணன் அவர்கள் எழுதிய 'கட்டில் வீணை' என்னும் கவிதை நூலுக்கு 1975இல் வழங்கிய அணிந்துரை.

சிரித்து மகிழுங்கள்

பேராசிரியர் ரா.சீனிவாசன் அவர்கள் எழுதிய 'சிரித்து மகிழுங்கள்' என்னும் நூலுக்கு 1975இல் வழங்கிய அணிந்துரை.

சந்தனக் கிண்ணம்

கவிஞர் ஐ.உலகநாதன் அவர்கள் எழுதிய 'சந்தனக் கிண்ணம்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

ஒற்றையடிப்பாதை

பேராசிரியர் ரா.சோதிவாணன் அவர்கள் எழுதிய 'ஒற்றையடிய் பாதை' என்னும் கவிதை நூலுக்கு 1976இல் வழங்கிய அணிந்துரை.

புன்னகை

கவிஞர் சேயாறு காருண்யன் அவர்கள் எழுதிய 'புன்னகை' என்னும் கவிதை நூலுக்கு 1979இல் வழங்கிய அணிந்துரை.

நயனங்கள்

கவிஞர் சா.ஆ.அன்பானந்தன் அவர்கள் எழுதிய 'நயனங்கள்' என்னும் கவிதை நூலுக்கு 1979இல் வழங்கிய அணிந்துரை.

நேயர் விருப்பம்

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 'நேயர் விருப்பம்' என்னும் கவிதை நூலுக்கு 1977இல் வழங்கிய அணிந்துரை.

உலகே உனக்காக

கவிஞர் நரிப்பையூர் கசேந்திரன் அவர்கள் எழுதிய 'உலகே உனக்காக' என்னும் கவிதை நூலுக்கு 1981இல் வழங்கிய அணிந்துரை.

பொழுது புலர்ந்தது

கவிஞர் பட்டுக்கோட்டை ராசேந்திரன் அவர்கள் எழுதிய 'பொழுது புலர்ந்தது' என்னும் கவிதை நூலுக்கு 1981இல் வழங்கிய அணிந்துரை.

மனத்தூறல்

கவிஞர் ம.ஏ.கணேசன் அவர்கள் எழுதிய 'மனத்தூறல்' என்னும் கவிதை நூலுக்கு 1982இல் வழங்கிய அணிந்துரை.

நிலா முற்றம்

கவிஞர் வேலூர் ம.நாராயணன் அவர்கள் எழுதிய 'நிலா முற்றம்' என்னும் கவிதை நூலுக்கு 1982இல் வழங்கிய அணிந்துரை.

தமிழ்ப்பாவை

கவிஞர் உரத்தநாடு சங்கரலிங்கம் அவர்கள் எழுதிய 'தமிழ்ப்பாவை' என்னும் கவிதை நூலுக்கு 1983இல் வழங்கிய அணிந்துரை.

மன்மத ராகங்கள்

ஓவியக்கவிஞர் அமுதபாரதி அவர்கள் எழுதிய 'மன்மத ராகங்கள்' என்னும் கவிதை நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.

போர்க்களத்தில் பாரதம்

கவிஞர் சைதை ஓடையான் அவர்கள் எழுதிய 'போர்க்களத்தில் பாரதம்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

பொழுது புலரட்டும்

கவிஞர் முகில்வாணன் அவர்கள் எழுதிய 'பொழுது புலரட்டும்' என்னும் கவிதை நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.

இன்னொரு விடுதலை

கூ.வ.எழிலரசு அவர்கள் எழுதிய 'இன்னொரு விடுதலை' என்னும் நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.

சந்தனக்கதவு

'சந்தனக் கதவு' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1971இல் வழங்கிய அணிந்துரை.

கலாவள்ளி காவியம்

பினாங்குக் கவிஞர் ஓ.எம்.காதர் சுல்தான் அவர்கள் எழுதிய 'கலாவள்ளி காவியம்' என்னும் கவிதை நூலுக்கு 1977இல் வழங்கிய அணிந்துரை.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"நூலைப்படிக்க"

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.