வாணி கபூர்
வாணி கபூர் (Vaani Kapoor) 1988 ஆகஸ்ட் 23இல் பிறந்த[1] is an இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார்.[2][3] கபூர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது நடிப்புத்திறன் 59 வது ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த அறிமுக பெண் நடிகருக்கான விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிந்துரைகளையும் இவருக்கு பெற்றுத் தந்தது, 2014 இல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான ஆஹா கல்யாணம்", என்ற படத்தில் நடித்தார். இது மிதமான வெற்றியாக நிரூபிக்கப்பட்டது.[4]
வாணி கபூர் | |
---|---|
![]() 2018இல் வாணி கபூர் | |
பிறப்பு | 23 ஆகத்து 1988[1] தில்லி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை, விளம்பர நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 2010 – தற்போது வரை |
வாழ்க்கை மற்றும் வாழ்க்கை
கபூரின் தந்தை ஒரு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிலதிபர் ஆவார், மற்றும் அவரது தாயார் ஆசிரியராகைருந்து பின்னர், விற்பனை நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனார். அவர் தில்லியில் அசோக் விஹார் மாதா ஜெய் கவுர் பப்ளிக் பள்ளியில் கல்வி கற்றார். பின்னர் அவர் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பில் சேர்ந்தார், பின்னர் அவர் சுற்றுலாத் துறையில் ஒரு இளங்கலை பட்டம் முடித்தார், அதன் பின்னர் அவர் ஜெய்ப்பூரில் ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் பணியாற்றினார், பின்னர் "ஐடிசி" (ITC) ஹோட்டலுக்காக பணியாற்றினார். விளம்பரங்களுக்கான திட்டங்களில் ஒப்பந்தமானார். [5]

பின்னர் யாஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[6] கபூர், "சுஷந்த் சிங் ராஜ்புட்" மற்றும் "பரிணீதி சோப்ரா" ஆகியோருடன் இணைந்து நடித்த காதல் நகைச்சுவைத் திரைப்படமான "சுத் தேசி ரொமான்ஸ்" படத்தில் ஒரு துணைப் பாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நேரடி உறவு விஷயத்தை கையாளுகிறது, இது விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றது,
2010 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த திரைப்படமான ஆஹா கல்யாணம்" என்பதில் நடித்தார். இது "பேன்ட் பாஜா பாராட்" என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[7]
குறிப்புகள்
- Kapoor, Vaani (29 November 2013). "its 88!*sigh*". Twitter.com. பார்த்த நாள் 3 February 2014.
- "'Shuddh Desi Romance' more challenging than fun: Vaani Kapoor" (18 September 2013). பார்த்த நாள் 19 October 2013.
- "Personal Agenda: Vaani Kapoor".
- "Aha Kalyanam movie review: Subject no match for Telugu audience". தி டெக்கன் குரோனிக்கள். மூல முகவரியிலிருந்து 22 February 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 February 2014.
- "Vaani Kapoor: Was VERY SCARED of the director of Shuddh Desi Romance".
- "'Shuddh Desi Romance' more challenging than fun: Vaani Kapoor". Mid Day (18 September 2013). மூல முகவரியிலிருந்து 13 October 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 October 2014.
- "I understand Tamil well: Vaani Kapoor". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் 30 August 2017.