வாணி கணபதி
வாணி கணபதி (Vani Ganapathy), ஒரு இந்திய பரத நாட்டியக் கலைஞர்,[1] திரைப்பட நடிகையாவார். 1978 ஆம் ஆண்டில், இவருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் திருமணம் நடந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
இவருக்கு டி.ஏ. ராஜலட்சுமியிடம் கல்கத்தாவில் மூன்று வயதில் நடன பயிற்சி தொடங்கியது. பிறகு தன் சிறு வயதிலேயே பம்பாய் சென்றார் அங்கு அவரது கல்வியும், பயிற்சியும் தொடர்ந்தது.
நடன வாழ்க்கை
இவரின் ஏழு வயதின்போது நடனமாடத் துவங்கினார். தன்னுடைய நடனத்திற்காக உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். இவர் சஞ்சாரி என்ற நடனப் பள்ளியைப் பெங்களூரில் நடத்தி, வசித்து வருகிறார்.[2]
நடித்த திரைப்படங்கள்
- மேல் நாட்டு மருமகள்[3]
- உல்லாசப் பறவைகள்
குறிப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.