வாதீ ஹல்பா

வாடி ஹல்பா (அரபு மொழி: وادي حلفا[1]) சூடான் நாட்டின் வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது நுபியா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கர்த்தூம் நகரில் இருந்து வரும் தொடர்வண்டி பாதை இங்கு முடிவடைகிறது. இந்நகரின் மக்கள் தொகை 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு விவரப்படி 15,725 பேர் ஆவர்.[2]இந்த நகரம் பழங்கால பல நுபியன் இராச்சியத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். எனவே தொல்லியல் துறை வல்லுநர்கள் இவ்விடத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். மேலும் அஸ்வான் அணையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வாடி ஹல்பா
நகரம்
வாடி ஹல்பா
சூடானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 21°47′N 31°22′E
Country சூடான்
மாநிலம்வடக்கு
மக்கள்தொகை (2007)
  மொத்தம்15,725

மேற்கோள்கள்

  1. முன்னதாக ரோம அரபு எழுத்தில் Halfa and Wady Halfa.
  2. https://books.google.co.in/books?id=0LooyExir7EC&pg=PA416&redir_esc=y#v=onepage&q&f=false
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.