வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்

வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர் (World Series Hockey , WSH) இந்தியாவில் நடத்தப்படும் தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட கூட்டிணைவு போட்டியாகும். இதனை இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பும் நிம்பசு இசுபோர்ட்சும் இணைந்து நடத்துகின்றன. இந்தியாவில் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆர்வத்தை தூண்டுவதே இதன் குறிக்கோளாகும். உரிமை வழங்கப்பட்ட எட்டு அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய தேசிய அணியிலிருந்தும் வெளிநாட்டு அணிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் இந்த அணிகளில் விளையாடுகின்றனர். பன்னாட்டு வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பில் உறுப்பினராகவுள்ள ஆத்திரேலியாவின் டென்னிசு மெரெடித் இதன் தொழினுட்ப இயக்குநராக உள்ளார்.[1] இந்தப் போட்டிக்கு தற்போது வட்டகை தயாரிப்பாளர்களான பிரிட்ச்சுச்டோன் புரவணைப்பைத் தருவதால் இந்தப் போட்டி அலுவல்முறையில் பிரிட்ச்சுச்டோன் வளைதடிப்பந்தாட்ட உலகத் தொடர் என்றழைக்கப்படுகின்றது.[2]

பிரிட்ச்சுச்டோன் வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்
The logo of the World Series Hockey
நாடுகள் இந்தியா
நிர்வாகம்ஆக்கி இந்தியா
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
நிறுவப்பட்டது2011
போட்டி வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி &
ஒற்றை வெளியேற்றப் போட்டி
முதல் போட்டி2012
அடுத்த போட்டி2012–13
அணிகளின் எண்ணிக்கைஉரிமை வழங்கப்பட்ட 8 அணிகள்
தற்போதைய வெற்றியாளர்சேர்-இ-பஞ்சாப் (முதல் கோப்பை)
மிகவும் வெற்றிபெற்றவர்சேர்-இ-பஞ்சாப் (முதல் கோப்பை)
மிகுந்த கோல்கள் குர்ஜிந்தர் சிங் (சண்டிகர் காமெட்சு) (19)
சையது இம்ரான் வார்சி (சென்னை சீட்டாசு) (19)
தொலைக்காட்சி பங்காளி(கள்)நியோ இசுபோர்ட்சு பிராட்கேசுட்டு பி.லிட்.
வலைத்தளம்அலுவல்முறை வலைத்தளம்
அலுவல்முறை முகநூல் பக்கம்
அலுவல்முறை துவிட்டர் கணக்கு
அலுவல்முறை யூடியூப் அலைவரிசை
2012–13

2012ஆம் ஆண்டு நடந்த துவக்கப் போட்டியில் சேர்-இ-பஞ்சாப் கோப்பையை வென்றது; இறுதியாட்டத்தில் பஞ்சாப் அணி புனே இசுட்ரைக்கர்சு அணியை 5-2 கோல்கணக்கில் வென்றது. கூகுளிலும் யூடியூப்பிலும் போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் நேரடி ஒளிப்பாய்ச்சிய (live stream) முதல் வளைதடிப் பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது.[3] இதன் இரண்டாம் பருவம் திசம்பர் 15, 2012 முதல் சனவரி 20, 2013 வரை நடந்தது.[4]

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.