வளைகுடா ஓடை
வளைகுடா ஓடை (Gulf Stream) அத்லாந்திக் பெருங்கடலில் உள்ள ஓர் முதன்மை நீரோட்டம் ஆகும். இது வடக்கு அத்லாந்தியப் பெருங்கடலின் குறுக்கே ஓடுகிறது. புளோரிடாவின் முனையில் துவங்கும் இந்த நீரோட்டம், ஐக்கிய அமெரிக்கா, கனடாவின் நியூ பவுண்டுலாந்து ஆகியவற்றின் கிழக்குக் கடலோரமாகச் சென்று அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காக நகர்ந்து ஏறத்தாழ 40°0′N 30°0′W ஆள்கூற்றில் இரண்டாகப் பிரிந்து இதன் வடக்குப் பிரிவு வடக்கு ஐரோப்பாவிற்கும் தெற்குப் பிரிவு மேற்கு ஆபிரிக்காவிற்குமாக ஓடுகிறது. மேற்கத்திய வலுவூட்டலினால் வளைகுடா ஓடை வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரம் வடக்கு நோக்கியே நகர்கிறது.

வளைகுடா ஓடை வட அமெரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதிகளின் வானிலையையும் ஐரோப்பாவின் மேற்கு கடலோரப்பகுதிகளின் வானிலையையும் பாதிக்கிறது. இதனால் குளிர்ந்த வடக்கில் இருந்தபோதும் மேற்கு ஐரோப்பாவின் கடலோரப் பகுதிகள் சூடாக உள்ளன. பல்வகை வலுவான சூறாவளிகளுக்கும் இவை காரணமாக அமைகின்றன. இந்த ஓடையிலிருந்து புதிப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
சேற்சான்றுகள்
- Jeremy Elton Jacquot. Gulf Stream's Tidal Energy Could Provide Up to a Third of Florida's Power. Retrieved on 2008-09-21.