வளர்ச்சி
வளர்ச்சி என்பதன் வரையறை:
ஓர் உயிரின் உருப்பெருக்கம் (அ) அளவு அதிகரித்தலை வளர்ச்சி என்கிறோம். ஒரு குழந்தை வளர்ச்சியடையும் போது அதன் உயரம், எடை, அளவு, பருமன் போன்றவை அதிகரித்தல்.
வளர்ச்சியின் பண்புகள்
- ஓர் உயிரின் உருவ அளவும் எடையும் அதிகரிக்கும்போது வளர்ச்சியடைவதாகக் கருதப்படுகிறது.
- வளர்ச்சி அளவீட்டுக்குட்பட்டவை.
- வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதில்லை. முதிர்ச்சிக்குப் பின் நின்று போகும்.
- வளர்ச்சி முன்னேற்றத்தைப் பாதிக்கிறது.
- வளர்ச்சி விகிதம் ஒரே சீராக இருப்பதில்லை.
- தனியாள் வேறுபாடு காணப்படுகிறது.
- உடலின் வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு விகிதத்தில் வளர்ச்சி பெறுகின்றன. (எ.கா) நரம்பு மண்டலம் முதலிலும் இனப் பெருக்க மண்டலம் கடைசி நிலையிலும் வளர்ச்சியடைகிறது.
- வளர்ச்சி மரபணுவைப் பொறுத்து வேறுபடும்.
- கரு உருவானது முதல் இறக்கும்வரை முறைப்படுத்தப்பட்ட மாற்றங்கள் நிகழும்.
- இவற்றை புறவயத்தன்மையோடு உற்று நோக்கலாம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.