வல்லம்பர்

300 ஆண்டுகளுக்கு முன் மராத்திய படையெடுப்பின் காரணமாக புலம்பெயர்ந்த வல்லம்பர் ஆவர். அச்சமயம் காரைக்குடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர். பின்னர் மருது மன்னர்கள் ஆண்டபோது இப்பகுதிகளை வல்லம்பரிடமே கொடுத்தனர். இன்றைய தமிழகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராயவரம், கல்லூர், புதுப்பட்டி,கோட்டையூர், வேலங்குடி கண்டனூர் பள்ளத்தூர் போன்ற பகுதிகளில் இவர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.

வரலாறு

வல்லம்பரினம் வில் அம்பு வீச்சில் தனி திறமை கொண்ட சந்ததியினரால் உருவாகியதால் வில்லம்பர் என்பதே மருவி வல்லம்பர் ஆனது. ஒரே வில்லில் பன்னிரெண்டு அம்புகளை விடும் திறமை கொண்டு இருந்தனர். நாட்டுக்காக போரிடுவது, நாட்டின் எல்லையை காப்பது, கள்ளரிடம் திருடரிடம் மற்றும் கொள்ளையரிடம் இருந்து குடிமக்களை காப்பது என்பதே இவர்களின் தலையாய கடமைகள். சேர்வார மன்னர்களால் மகிழ்ந்து இவர்களுக்கு வழங்கப்பட்ட பகுதி நாடுகள் பத்து. அந்த நாடுகளில் வாழும் இவர்கள் நாட்டார்கள் எனவும் அதன் தலைவர்கள் அம்பலம் எனவும் அழைக்கப்பட்டனர்.

அச்சமயம் கிழக்கு பகுதியில் ஏத்து நாடு 84 கிராமங்களை கொண்டது மகாண நாடு காரைக்குடியை சுற்றியுள்ள மேற்கு பகுதிகளுக்கு பாளைய நாடு என்று பெயர். மருது மன்னர்கள் ஆண்டவரை இப்பகுதி இவர்கள் வசமே இருந்தது. ஆங்கிலயர்கள் வருகைக்கு பின் இவர்கள் அபாயகமானவர்கள் ஆக கருதப்பட்டு துண்டாடப்பட்டனர். கீழை நாடு மேலை நாடு என இவர்கள் அவர்கள் பாணியில் பங்காளிகளுக்குள் நாட்டார்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் மோதிக்கொண்டனர்.ஆங்கிலயர்கள் வருகைக்கு பின் இவர்கள் வில் அம்புக்கு வேலையில்லாமல் வருமானத்துக்கும் வழியில்லாமல் முழு மூச்சில் விவசாயத்தில் காணியில் இறங்கினர், பாதிப் பேரை மூளை சலவை செய்து குடும்பத்துக்கு பணத்தைக் கொடுத்து மலாயா பர்மா என ஆங்கிலயர்கள் கொண்டு சென்றனர் ஆனால் இளைய சமுதாயத்தில் பெரும்பான்மையினோர் நேதாஜியின் இராணுவப் படையில் சேர்ந்தனர் வீர மரணம் அடைந்தோர் அதிகம்.

கொங்கு மண்டல சதகங்கள்

கொங்கு வேளாளர் குலத்துப்பாடல்: பாடல் 3[1]

கனமலையில் வில்லம்பர் பதுமைகுல வேளாளர்

கனவாள ஓதாளரும்

காவேரி நதிகுலன் ஆரியகுலத் தரும்

காவைகுலர் ஆவைகுலரும்

கனத்த தாரணிகுலர் சந்திரகுல ரிந்திரகுலர்

கனவேம்பன் மேதிகுலரும்

காரணப் பதுமைகுலர் பூரகுலர் பாண்டிகுலர்

காரைகுலர் பூச்சைகுலரும்

கதிர்குலவு மலையகுலர் காமகுலர் சோமகுலர்

கதித்திடும் அழகர்குலமும்

கனமேவு வௌ்ளிகுலர் தனியகுலர் தம்முடன்

கற்பித்த சக்திகுலரும்

கனத்தகுலர் பாலகுலர் பாத்தியகுலர் பரதகுலர்

கருமேவு கொல்லிகுலரும்

காங்கயநன் னாட்டிலுயர் பரஞ்சைநகர் விழியகுலர்

கனவேத்தி னாககுலரும்

கந்தமுயர் வேதகுலர்

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=255
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.