வலைப் பக்கம்

இணையப் பக்கம் அல்லது வலைப் பக்கம் எனப்படுவது, இணைய உலாவியொன்றின் மூலமாகக் கணினியொன்றின் திரையிலோ கையடக்கத் தொலைபேசியின் திரையிலோ காட்சிப்படுத்தப்படும் உலகளாவிய வலையில் காணப்படும் கோப்பு அல்லது தகவல் மூலமாகும். இந்தத் தகவல் மூலமானது, அடிப்படையில் மீப்பாடக் குறிமொழி (HTML) அல்லது XHTML வடிவத்தில் உருவாக்கப்பெற்றிருக்கும். இந்தத் தகவல்களைப் பொருத்தமான வகையில் வெளியிடும் பொருட்டு, இப்பக்கங்களிடையே, இணைப்புகள், தொடர்நிலை அமைப்புகள் என்பன பயன்படுத்தப்படும். கூடவே, இணையப்பக்கங்களின் தோற்றத்தை மெருகேற்றும் பொருட்டு, விழுத்தொடர் பாணித் தாள்கள், படிமங்கள் என்பனவும் பயன்படுத்தப்படும்.

விக்கிப்பீடியாவிலுள்ள ஓர் இணையப் பக்கத்தின் திரைக்காட்சி

இணையப் பக்கங்கள் உள்ளகக் கணிணியொன்றிலிருந்தோ சேவையகக் கணினியொன்றிலிருந்தோ பெற்றுக் கொள்ளப்படலாம்.

இணையப் பக்கமானது கீழ்வருவனவற்றைப் பொதுவாகக் கொண்டிருக்கும்.

  • சொற்கள்
  • படங்கள் (gif, JPG அல்லது PNG)
  • ஒலி (midi, wav)
  • வேறு மென்பொருட்கள் (flash, shockwaver)
  • ஜாவா அப்லெட்கள்

இணையப் பக்கத்தை மெருகேற்ற உதவுகின்ற நிலைகள்

  • ஸ்கிரிப்ட் (பொதுவாக ஜாவாஸ்கிரிப்ட்)
  • meta tags
  • Cascading Style Sheets (CSS) இணையத் தளமானது எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்
  • கருத்துகள் (Comments)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.